உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

61

அங்ஙன மின்மையானும், பஞ்சபூதங்களென்று அ கூறலானும் இந்தப் பஞ்ச பூதங்களும் ஒன்றிலொன்று காரண காரியங் களாகத் தோன்றாமல் பஞ்சதன்மாத்திரைகளி

னின்றும் பிறந்தன வென்பது தத்துவசாஸ்திரிகளது

துணிவாகலானும் இவரது ஏழைமதியை யினிச் சுட்டெரிக்க வேண்டியதே. ஆகாயத்தில் வாயுவும், வாயுவிற்றேயுவும், தேயுவில் அப்புவும், அப்புவிற் பிருதிவியுந் தோன்றின வென்பது பொய்யோவெனின், இவர் கூறிய காரண காரியத்தைத் தடுத்தோமேயன்றித் தோற்றத்தை யாம் தடுத்தோமில்லை. இனி யத்தோற்றம் வியாபக வியாப்பியங்களாய்க் கொள்ளத் தக்கது. எங்ஙன மெனின், ஒரு பெரிய பாத்திரத்தில் அதிற் சிறிய பாத்திரமும், அதில் மற்றொரு சிறிய பாத்திரமும், அதில் வேறொரு சிறிய பாத்திரமும், அதில் பிறிதொரு சிறிய பாத்திரமும் அடங்கியிருப்பதும் அவையொன்றிலிருந் தொன்று வெளி வருவதுமாகிய நிதரிசனமே யீண்டமைதி யாய தென்க.

வை

இனி யிவர் தேடிய வுபமானம் இவரது எண்ணத்தைப் பூர்த்தி செய்யுமோவென்று யோசிப்போம். பஞ்சு-நூல்- வஸ்திரம் என்றிவ ரெடுத்துக் கொண்டதில் பஞ்சிலுள்ள தன்மையே நூலிலும் வஸ்திரத்திலுங் கண்டாம். எனவே, நூலையும் பஞ்சென்று கண்டாம். வஸ்திரத்தையும் பஞ்சென்று கண்டாம். நூலைப் பிச்சிப் பார்த்த போதும் வஸ்திரத்தைப் பிச்சிப் பார்த்த போதும் இவை பஞ்சாலாக்கப் பட்ட யென்று சிறு குழந்தையு மறிந்து சொல்லும். இவற்றோ டெங்ஙனோ ஆகாயமாதிகள் பொருந்தும், ஆகாயத்தின் றன்மை வாயு முதலியவைகளிலும், அல்லது ஆகாயத்தின் றன்மை வாயுவிலும், வாயுவின் றன்மை தேயு விலும், தேயுவின் றன்மை அப்புவிலும், அப்பிவின் றண்மை பிருதிவியிலுங் காணுதல் கூடுமோ? இவை யொன்றோடொன்று விஜாதி களும், ஒன்றிலொன்று பகைமை கொண் மென்பது எவருமெளிதி னுணரக் கூடுமாகவும், இவ்விந்துவுக்கு மாத்திரம் ஏனோ இப்படி வீண்விபரீதம் ஜனித்தது, இவ ரெழுதிவிட்டது கொண்டே உலகம் சம்மதித்து விடுமா? இவர் கிறுக்கி வைத்ததற்கு நூலாட்சியுண்டா? எந்தப் பூர்வ

வைகளுமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/94&oldid=1590135" இலிருந்து மீள்விக்கப்பட்டது