உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் 26

சொல்லப்பட்டிருக்கின்றன? இவருக்குத் தலை நோயாய் வந்து சம்பவிக்கு மிவரது சமய திட்டாந்தங்களை யிவரே யிப்போது பூர்வபட்சம் பூர்வபட்சம் என்று சொல்லி மானங்காத்துக் காள்ளப் பார்க்கிறார். எல்லாவற்றையும் பூர்வபக்ஷங்களென வொழித்து இவர் சித்தாந்தமாகத் தேடிய கயிற்றரவும் இவரைத் தெருவிலே தியங்க விடுத்தமையால் இனி யிதன் முகத்தில் விழித்து அவமானப்படாது சீவிப்பது இவருக்குப் பெருமை யாம். இனி யிவரது மதத்தினர் கூறுந் திட்டாந்தங்கள் ஒரு பொய்யைச் சாதிக்கத்தேடிய பல பொய்களாம். எல்லாத் திட்டாந்தங்களும் பொய்யா யொழி யவே, அவற்றாற் சாதிக்கப்படு மிவரது மாயாவாத மதம் சுத்த பொய்யாயினது சத்தியமென்றறிக.

இவ்வாறு நாயகரவர்களா லெழுதப்பட்ட அரிய விஷயங்களைக் கண்ணுற்றபின் இந்து என்பவர் போன்ற வர்கள், சத்தியத்தை விரும்பினவரும் தமது ஆத்மோஜ் ஜீவனத்தைக் கருதினவருமாயிருப்ப துண்மையெனின், வீண் பிடிவாதங்களை விட்டு உடனே குணப்படவேண்டியது.

பஞ்சுத் திட்டாந்த அழிவு

இனி இந்து என்பவ ரெடுத்தாண்ட பஞ்சுத் திட்டாந் தத்தின் மேல் நாயகரவர்களது விசாரனை வருமாறு:

இவர் ஆகாயத்திலிருந்து வாயுவும், வாயுவிலிருந்து தேயுவும், தேயுவிலிருந்து அப்புவும், அப்புவிலிருந்து பிருதிவியுந் தோன்றினவென்று கூறி, இதற்குப் பஞ்சிலிருந்து நூலும், நூலிலிருந்து வஸ்திரமு முண்டாகிய வுபமானத்தை யெடுத்து நிறுத்தினார். பஞ்சில் நூல்வஸ்திரங்க ளெங்ஙனந் தோன்றுமோ, அங்ஙனமே ஆகாயத்தில் வாயுவாதிகள் தோற்ற மெனவும், அப்படியே பிரமத்தின் கண் இச்சாக்கிரவுலகு தோற்றமாம் எனவும் தமது ஆபாசஞான மண்மாரி பொழிந்து சருக்கித்தருக்கினார். ஆகாயம்-வாயு-தேயு-அப்பு-பிருதிவி யன்பன பஞ்சபூதங்களெனப் பெயர் பெறும். இவை யொன்றி லொன்று காரியரூபமாகத் தோன்றியதுண்டாயின், பூதம் ஒன்றேயென்றும், அது ஆகாயமென்றும், ஏனைய வாயு முதலியன பூத காரியங்க ளென்றும் வேதாதிகள் கூறும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/93&oldid=1590134" இலிருந்து மீள்விக்கப்பட்டது