உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

59

பிரமத்துக்கு அஞ்ஞான முண்டானதும் அது உலகமானதுங் கிடையாதென்றறிக. இனியவ்வுபமானத்தை யெமது சைவ

சித்தாந்தத்தோடொட்டியுபகாரப்படுத்துவாம்.

கயிறு அரவுபோற்றோன்றியது.

யாருக்கு அரவு தோன்றியது?

ஒரு புருடனுக்கு.

ஏன் றோன்றியது?

மாலைக்கால தோஷத்தால்.

இனிப் பிரமம் உலகு போற் றோன்றியது. யாருக்கு உலகு தோன்றியது?

ஜீவனுக்கு. ஏன்றோன்றியது?

அஞ்ஞானத்தால்.

மாலைக்காலம் விலகியபோது பாம்பு தோன்றாமல் கயிறே தோன்றுவது போல அஞ்ஞானம் விலகியபோது உலகு தோன்றாமல் பிரமமே தோன்றுமென்க. மாலைக் காலமும் அஞ்ஞானமும் பிரதிபந்தக மாகையால் இந்தப் பிரதிபந்தகத்தைப் பிரமத்தினிட மாரோபித்தமதம் கேவலம் ஈனமதமாயினது சத்தியமென்றறிக. ஈண்டியாம் கயிற்றரவுத் திட்டாந்தத்தை யாண்டது சித்தாந்தமாக வன்று. அது எமது மதத்திற்குத் தீங்கு பயவாமையைத் தெரிவித்தபடியாம். இவரது விவர்த்தவாதம் விருதாவாதமாகி யழிந்ததற் கினி யிவரென் சய்வார்? கயிற்றரவு போன்ற விவர்த்தவாதமே யெமக்குச் சொந்தமென்று சாதித்த விவர் வேறோரிடத்தில் “அத்வைதி களுடைய சித்தாந்தம் கயிற்றரவு போன்ற பரிணாமமேயாம்" என்று பேசிப் பெருமையிழந்தா ரிதென்கோலோ?

L

பால் தயிரா யிடுதலே பரிணாமத்தி னியல்பு. இது தனது மதத்துக்கு முதுகு மூட்டையாயிடுதலை யறிந்து இதனை யொழிக்க இடைவெளி பார்த்து இவரது மதத்தினார் பால் தயிராகும் பரிணாமத்தைப் பூர்வபக்ஷமாயாளுகின்றனரென்று சாக்குப்பேசிச் சதுரிழந்தனர். எந்தப் பூர்வநூலிலிவர் பிதற்றியது போலப் பால்தயிர்ப் பரிணாமம் பூர்வபட்ச மென்றும், கயிற்றரவுப் பரிணாமமம் சித்தாந்தமென்றுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/92&oldid=1590133" இலிருந்து மீள்விக்கப்பட்டது