உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

மறைமலையம் - 26

சொப்பனவுலகே சித்தாந்தம் என்றது கொண்டு, கயிற்றரவு முதலியன பூர்வபட்சம் என்பது சொல்லாமே யமைந்தது இவர் கயிற்றரவைப் பூர்வபட்சமென்று ஒரு அவசரத்திற் சொன்னாலும், பல அவசரங்களிற் கயிற்றர விலேயே தமது பிரமத்தைக் காண்டு போய் மாட்டிக் கலங்கச் செய்கின்றவராகையால், இந்தக் கயிற்றரவுத் திட்டாந்தத்தையும் சொப்பனவுலகுத் திட்டாந்தத்தையுஞ் சோர்வுபடச்செய்து பிரமத்துக்கு அஞ்ஞான முண்டாகாமையை யெவருமறிந்து சந்தோஷிக்கச் செய்வாமென்க.

கயிற்றரவுத் திட்டாந்த அழிவு

கயிறு அரவுபோற் றோன்றுகிறது.

யாருக்கு தோன்றுகிறது?

ஒரு புடனுக்குத் தோன்றுகிறது.

ஏன்றோன்றுகிறது?

மாலைக்கால தோஷத்தால்,

இனிப் பிரமம் உலகுபோற்றோன்றுகிறது. யாருக்குத் தோன்றுகிறது?

வழ வழ குழ குழ.

இதற்குப் பொருளென்னை?

சொல்லத் தெரியாத பொருடான்,

சொல்லத் தெரியாமலா மாயாவாதி மல்லாடுவது?

பிரமத்தைத் தவிர இரண்டாவது பொருளில்லாத போது எது

அப்பிரமக்கயிற்றில் உலக அரவைக் கண்டது?

கண்டபொரு ளேற்படாத போது அதற்கு உலகு ஏன் றோன்றிய தென்னுங்

கடா நிகழ்வதெப்படி?

ஏன் றோன்றியதென்னுங் கடாநிகழ்வதற்கே ஏதுவில்லாதபோது பலானதோஷத்தாலென்று எப்படிக் கூறுவது?

காலைக்கிளப்பிக்

இவ்வாறு கயிற்றரவுத் திட்டாந்தங் கொண்டதற் கிவரென்செய்வார்? கயிறு தன்னைப் பாம் பாகப் பிரமித்ததுண்டெனின், பிரமந் தன்னை யுலகாகப் பிரமித்த சித்தாந்தந் தலைதூக்கும். கயிற்றுக்கு ஒருக்காலும் பிரமை யுண்டானதும், அது பாம்பானதுங் கிடையாதா கையால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/91&oldid=1590132" இலிருந்து மீள்விக்கப்பட்டது