உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

57

இவரிங்கே யொரு ஜாதியில் மற்றொரு ஜாதி பிறக்கு மென்று பிரசங்கித்துப் பிரமத்தை யலையவிட்டு மாயாவாத மஹாநுபாவராய்க் கொடிபோட்டாரன்றோ? இவரது பூர்வ நூல்கள் சுஜாதி விஜாதி சுகதபேதரகிதமானது பிரமம் என்று கூறுகின்றன. பிரமத்துக்கு வேறான சுஜாதிப் பிரமமும், விஜாதிச்சீவனு மில்லையென்றதோடு அப்பிரமத்திலிருந்து அதுபோன்ற பிரமமேனும், அதற்கு வேறான ஜீவஜகங்க ளேனும் (சுகதபேதமாக) உண்டாகவில்லையென்று கூறு மிவர்களது முன்னோர் மதத்தை இவர் மூடமதமாக்கினார் கண்டீர். என்னை? முன்னோர்மதத்தைத் தழுவியேயன்றோ யாம் விவர்த்தவாதா வலம்பனஞ் செய்து “இல்லையென்று கூறுவதும் உண்மை தான், உண்மையென்று கூறுவதும் உண்மை தான்” என்று கூறிக் கயிற்றரவைச் சுட்டிச் சாதித் தோமெனின், இவர் சாதித்தது பரமார்த்த குருவாகிய இவரது சீடர்களுக்கே பயன்படத்தக்கதாம். எங்ஙனமெனின், இவர் முதலி லெடுத்துக் கொண்ட பஞ்சு நூலுவமைகளில் பஞ்சும், நூலும் காரண காரியப் பொருள்கள். இவ்விரண்டும் உள் பொருள்களாம். பின்னரெடுத்துக கொண்ட நூல்வஸ் திரங்களும் உள்பொருள் களாம். அநந்தரமெடுத்துக் கொண்ட ஆகாயம் வாயு முதலியவைகளு முள் இவற்றொடு பொருத்திய பிரமமும் உலகமும் உள்பொருள் களாம். காரணகாரிய சம்பந்தத்தினாலாவது, வியாபக வியாப்பிய சம்பந்தத்தினா லாவது உள்பொருள்களாந் தன்மையே பெறப்பட்டதனை யிவரிப்போது தொடுத்த விரோதித்து இனப்படா

ரஜ்ஜுஸுர்ப்பதிட்டாந்தம்

முள்பொருள்களாம்.

தாதுங்கியவாறறிக. பிரமமும் உலகமும் கயிறும் அரவும் போல்வனவென்று இவரது மதாபாசகரேயன்றி யேனைய எந்த வைதிகசமயியாவது கூறியதுண்டா? கயிற்றிற் பாம்பு போல்வது பிரமத்திலுலகம் என்றிவர் கூறியது சொல்லா யிருப்பதன்றிப் பாருள் கொண்டு நின்றதில்லை. இதனை நம்பிப் கெடார் விவேகிகளென்க. இதனை யேன் நம்பக் கூடாதெனின், இவரே விவர்த்தவாத திருஷ்டாந்தங்களாகிய கயிற்றரவு, கானனீர், இந்தரஜாலம், சொப்பனவுலகு முதலியவை களுக்குள் சொப்பனவுலகே சித்தாந்தம்” என்று கூறினமை யாலென்க.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/90&oldid=1590131" இலிருந்து மீள்விக்கப்பட்டது