உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மறைமலையம் - 26

ரென்க. இப்படியே யிவர்காட்டிய ஏனையுவமைகளையும் பாகுபாடு செய்தொதுக்குவர் பெரியோரென்க.

வி

66

இவரிவ்வளவி லமையாது காரணத்தில் அங்ஙன மாய சத்தியிருந்தமையான் விஜாதி வடிவங்களுண்ட ாயின வென்னின், அங்ஙனமே விஜாதியான வாயுவாதிகள் தோன்றுதற் கியைந்த சத்தியிருந்தமையான் ஆகாயத்தினின் றும் விஜாதி யான வாயுவாதிகளுண்டாயின வென்பதாம். இவ்வாறே ஞானரூபமான பிரமத்தினின்றும் அஞ்ஞான ரூபமான (விஜாதி ரூபம்) உலகுதித்ததென்க." என்று நியாய மணங்கந்திக்க நின்று பிரசங்கித்தார். இவரது மணம் துர்மண மாதல் யீண்டுத் தெரிவிப்பாம். இவர் “காரணத்தில் விஜாதி வடிவங்களுண் டாகத்தக்கசத்தி யுண்டாயினவெனின்” என்று பிறர் மதந்தழுவி மறுக்கவந்தது யாங்ஙனம்? பிறரவ்வாறு கூறா திருக்கவும் அவர் கூறினார்போன்று இவர் வருவித்துக் கொண்டது இவரது அறியாமையேயாம். காரணத்திற் காரியமுண்டாம். அக்காரண மெத்தன்மைத்தோ காரிய முமத்தன்மைத்தாம். காரணத்திலுண் டாகுங் காரியம் விஜாதி ல் மேல் யாம் விளக்கியதே போதும். காகம் அணிலைப் பெறுமா? அணில் யானையை யீனுமா? யானை கோட்ட ானைத் தருமா? என்பனவாதி வினாக்களே வினாக்களே ஸாமஞ்சஸமாம். இவ்வாறு கடாவுதலொழிந்து காகத்தின் விந்துவில் காகத்தின் முட்டை யுண்டாகுமா? அணிலின் விந்துவில் அணிலின் மயிர் முளைக் குமா? யானையின் விந்துவில் யானையின் மத்தகந் தோன்றுமா? கோட்டானது விந்துவில் கோட்டானது சிறகுதிக் குமா? என்று கடாவுவாரை முட்டாள்களுக் கெல்லாஞ் சட்டாம்பிள்ளை யென்றே தத்துவ நூல் வல்லார் பேசித் தள்ளுவரென்க. இவரதுபமானம் கற்றவர்கழகத் திழிவெய்தியழிந்தமையால் அவ்வுபமானத்தாற் சாதிக்க வெழுந்த ஆகாசாதி பூதங்களினுற் பத்தியுபமேயம் நிலைபேறாயினதின்றென்க. இது போலவே ஞானரூபமான பிரமத்தில் அஞ்ஞானரூபமான விஜாதியுலகந் தோன்றிய தென்னும் பிரஹ்மதூஷணவாதமு மொழிந்து நிர்மூலமாய தென்க.

யாகாமையை

மாமரத்திட்டாந்தத்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/89&oldid=1590130" இலிருந்து மீள்விக்கப்பட்டது