உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

55

ங்

அநுவதித்து அதனை யிவர் மறுத்தவழகு தெய்வத் துக்கே வெளிச்சம். விஜாதியான இரண்டு பொருள்க ளொன்றி லொன்று பிறக்கலாமென்பதற்கு வித்தின் றன் மையை விட்டு அரும்பு-மலர்-காய்-கனி முதலிய விஜாதிகளும், விந்துவின் றன்மையைவிட்டு மாமிசம்-உதிரம்-எலும்பு முதலியவைகளும், இந்திர ஜாலசத்தியிலிருந்து வேறுதன்மையான பல விஜாதிப் பொருள்களும், சித் வடிவமான புத்தியிலிருந்து அசித் வடிவ மான பல விகாரங்களும், மனத்திலிருந்து சொப்பனஜகமு முண்டாகவில்லையா வென்று ஆசங்கித்து அகங்களித்தார். இவரது தெளிவின் மைக்கு யாம் பலதரம் வியசனப்படுகிறோம். ஏனெனில், ஒரு வித்தினுக்கு அதனங்குரம்-துளிர்-இலை-பூ- காய்-பழம்-பட்டை-மரம் முதலியன விஜாதிகளல்லவாம். மாவித்து அல்லது மாங்கொட்டை, மாவினங்குரம், மாந்துளிர், மாவிலை, மாம்பூ, மாங்காய், மாம்பழம், மாம் பட்டை, மாமரம் என்பவற்றாலறிக. மாவுக்கு விஜாதித்வம் யாண்டு மமைந்திலது. மாங்கொட்டையில் வாழையினங் குரமும், வேப்பந்துளிரும், ஆவிலையும், கொன்றைப்பூவும், பலாக் காயும், முந்திரிப்பழமும், வேலம்பட்டையும், எட்டி மரமுந் தோன்றுமாயின், இவை விஜாதிகளென்னலாம். இப்படிக் கின்றி மாவித்தில் அதன் காரிய பேதங்கடோன்றிய வாறு வாழை, வேம்பு, ஆல், கொன்றை, பலா, முந்திரி, வேல், எட்டி முதலிய வித்துக்களில் அவ்வவ்ற்றின் காரியபேதங் கடோன்றி, அந்தந்த ஜாதிப் பேராலேயே வாழைக்குருத்து, வேப்பங்கொட்டை, ஆலம்பழம், கொன்றைமலர், பலாக் காய், முந்தியிலை, வேலமுள், எட்டிமரம் என்பனவாதியாக வழங்கப் பட்டுவருத லிவரறியாது பிதற்றியது இவரது அகந்தையின் பயனேயாம். தருக்க நூல்களில் “நெல்கமுகாய் நீளுமாறு யாங்ஙனம்" என்று காட்டியிருக்கு முதாரணத் தையே மிவரறிந்து வெளிப்பட்டாரா? வளிப்பட்டாரா? இவரது மூடக் காள்கை நிலைபெற வேண்டின் “நெல் வைக்கோலாய் நீளுமாறு யாங்ஙனம்?” என்று முன்னோர் மொழிதேடி யிவர் காட்ட வேண்டும். இவருக்கு அகந்தையே குருவாகையால், இவர் பெரியோரைத் துணை கொண்டு வாழப் பின்னிட்டு விஷயங்களி னுண்மையியல் பறியப் பெறாத பேதையாயினா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/88&oldid=1590129" இலிருந்து மீள்விக்கப்பட்டது