உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் 26

ஸ்ரீநாயகரவர்களுபகரித்தது

ஒரு ஜாதியில் மற்றொரு ஜாதி தோன்றாதென்பது

இவர் விஷ்ணு புராணத்தில் “பிருதிவியானது அதைச் சூழ்ந்த அப்புவிலும், அவ்வப்பு அதைச் சூழ்ந்த தேஜசிலும், அத்தேஜசு அதைச் சூழ்ந்திராநின்ற வாயுவிலும். அவ்வாயு தன்னைச் சூழ்ந்த ஆகாயத்திலும், அவ்வாகாயம் அகங் காரத்திலும், அவ்வகங்காரம் மகத்தத்துவத்திலும் லய மாகின்றன” என்று கூறியிருப்பதாக வெழுதித் தனது அப சித்தாந்தந் தாபிக்கப்பட்டதாக மனப்பால் குடித்தார். இவரது மதம் தாபிக்கப்பட வேண்டுமாயின், பிருதிவியானது அதற்குக் காரணமாகிய அப்புவிலும், அவ்வப்பு அதற்குக் காரணமாகிய தேஜசிலும், அத்தேஜசு அதற்குக் காரணமாகிய வாயுவிலும், அவ்வாயு அதற்குக் காரணமாகிய ஆகாயத்திலும் லயமாகின் றனவென்று கூறியிருத்தல் வேண்டும். காரணத்திற் காரியந் தோன்றுதலும், அந்தக்காரியம் முன்காரணத்தி லொடுங்குதலும் நியதம். இவ்வாறு கூறாமல் பிருதிவியைச் சூழ்ந்த அப்பு, அப்புவைச் சூழ்ந்த தேயு, தேயுவைச் சூழ்ந்த வாயு, வாயுவைச் சூழ்ந்த ஆகாயம் என்று கூறினமையால், பிருதிவியை அப்பு வியாபித்தலும், அப்புவைத் தேயு வியாபித்தலும், தேயுவை வாயு வியாபித்தலும், வாயுவை ஆகாயம் வியாபித்தலும் பெறப் பட்டன. இதனால் வியாபக வியாப்பியங்களே யன்றிக் காரண காரியங்கள் பெறப்பட்டவா றில்லையறிக. ஆகாயத் தினி டத்தில் அதற்கு விஜாதியாகிய வாயுவும், வாயுவினிடத்தில் அதற்கு விஜாதியாகிய தேயுவும். தேயு வினிடத்தில் அதற்கு விஜாதியாகிய அப்புவும், அப்புவினிடத்தில் அதற்கு விஜாதி யாகிய பிருதிவியும் விரிந்திட மாட்டாவென்று யாம் கூறிய தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/87&oldid=1590128" இலிருந்து மீள்விக்கப்பட்டது