உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் 26

உளறினார் கண்டீர்! கங்கையானது கடலை நிரப்பியது, கடல் சுவற வேல்விட்டது என்று கூறும் ஆதரவுகளும் இவரது மதத்தைச் சிதைத்தனவென்க. இவ்வளவிலடங்கி வாழ்த லிவருக்குப் பெருமையாம். நிற்க.

இவர் "நீரும் உப்புங்கலந்திருத்தல் பின்னமாகவா அபின்னமாகவா” என்று தொடங்கி “அபின்னமென ஒரு போதும் சொல்லப்படாது” என்று கூறினார். நீரும் உப்பும் அபின்னமென்று சொன்னவர் யாவர்? சைவ சித்தாந்திகள் அவற்றின் சம்பந்தத்தைப் பின்னமென்றே கொண்டிரு கிறார்கள். சைவர்களொப்பியிருப்பதையே யிவருங் கூறிவிட்டு அவர்களைக் கண்டித்ததாக மனப்பால் குடித்தது அவிவேக மாகாதொழியுமோ? நீரும் உப்பும் பின்னமே யென்பதற்கு இவர் தேடிய ஏனையாதரவுகளின் ஜோலிக்குயாம் போவது ஆவசிய கமோ? எமக்கு விரோத மில்லாதவைகளை யாம் தொட்டுக் கொண்டு வீண் கால க்ஷேபஞ் செய்யகில்லேமென்க. பின்ன சம்பந்தமுடைய நீர்உவர்களை யுபமானமாகக் கொண்டு பசுபாசங்களும் பின்னசம் பந்தமுடையனவே யாமென்பது சித்தமென்றுணர்க. “பாசங் கழன்றாற் பசுவுக்கிடம்பதியாம்' பசுவினின்றும் பாசங் கழலுமென்பதற்கே நீரினின்றும் உப்பு நீங்கும் என்னுமு பமான முபகாரமாயதென்க. இனி யிவர் “எது பின்னமா யொருகாலத்திற் பிரிகின்றதோ, அது ஒரு காலத்தில் பின்ன மாய்க்கூடியே யிருந்திருக்க வேண்டும்” என்று பிரசங்கித்து "மரத்தின் மேலிருக்கும் பறவை பின்னமாகலின், அது மரத்தை விட்டுப் பிரிந்து போகின்றது” என்று எடுத்துக் காட்டியதையுஞ் சிறிது விசாரித் தொழிப்பாம். நீரையும் உப்பையும் பசுபாசங்களின் பின்னசம்பந்தத்தை விளக்குமுப மானமாக நூல்களெடுத்துக்கூறவும், இவரந்தநீருப்புகளின் நீர் உப்பு பின்ன சம்பந்தத்தை விளக்குதற்கு மரம் - மரத்திலிருக்கும் பறவை யென்பவைகளை யெடுத்தாண்டது சுத்தமூடத் தனமாம். உபமேயத்தை உபமானத்தால் விளக்குவது ஆவசியகம். அவ்வுபமானத்தை வேறோருபமானத்தால் விளக்குவது ஆவசியகமோ? ஓருபமேயத்தைப் வுபமானங்களால் விளக்கலாம். அவ்வுபமானங்க ளொன்றோ டொன்று உதைத்துக் கொள்ளுமாயின், எடுத்துக் கொண்ட

பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/111&oldid=1590152" இலிருந்து மீள்விக்கப்பட்டது