உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

79

உபமேயத்தைச் சாதித்துக் கொடுக்கமாட்டா. இவரெடுத்துக் கொண்ட நீருப்புகளின் பின்னசம்பந்தமும், மரம் பறவைகளின்

பின்ன சம்பந்தமுந் தம்முளொத்துவாழமாட்டா.

எங்ஙனமெனின், நீருள்ள ஞான்றே அதனோடு உவருள்ளது. நீரும் உவரும் பிரிபடாது தம்முள்விரவி நிற்பன. நீர்முழுதும் உவர் நிறைந்து விளங்கும். இவற்றோடு மரம் பறவைகளின் சம்பந்தம் பொருந்துமாறு யாங்ஙனம்? மரமுள்ளபோதே அதனோடு பறவையுள்ளதோ? மரமும் பறவையும் பிரிபடாது தம்முள்விரவி நிற்பனவோ? மரமுழுதும் அதாவது மரத்தி னுள்ளும் வெளியும் பறவை நிறைந்து நிற்பதோ? அன்றி, ஒரு மரத்தி லொருபறவைதானோ வாழும்? அதிலும் ஒரு ஜாதி பறவைதானோ வாழும்? இவை நீருவர்களின் சம்பந்தத்தோ டொவ்வாமையால், நீருவர்களின் சம்பந்தத்தோ டொட்ட வுரைக்கும் பசுபாசங்களுக்கு இவை களை நிதரிசனமாக்கியது அவிவேகமேயாம். அன்றி, கடனீரிலி ருந்து உப்பு ஒரு காலத்தில் பின்னமாயெடுக்கப் படுகின்ற மையால், அது ஒரு காலத்தில் பின்னமாய்க் கூடியே யிருந்திருக்க வேண்டு மென்பதும் மூடமாம். ஒரு காலத்திற் பின்னமாய்க் கூடியிருத்தலென்றது கடலுண்டானபோதோ, அல்லது உண்டாகிய சிலகாலத்தின் பின்னரோ, அந்தக் கடல் நீரில் முன்னில்லாதவுப்பினைக் காண்டுபோய்க்கொட்டி ஒருவர் அல்லது பலபேர் கலந்துவைத்தார்களென்பதேயாம். கடலை யுண்டாப்பினவர் கடவுளேயாகையால், அவர் கடனீரையும்-உப்பையுந் தனித்தனி யுண்டாக்கிப் பின்பொரு காலத்தில் இரண்டையு மொன்று சேர்த்தார் போலும். நூற்றுக்கு எழுபத்துமூன்று பங்கு நீரும், இருபத்தேழு பங்கு உப்புங் கடலிலிருந்தெடுக்கிறார்களென்று இவர் கூறிய படியே தான் ஆதியில் கடவுளவைகளைச் ஆ சேர்த்திருக்க வேண்டும் போலும். இவரிவ்வாறு கண்டெழுதியது எந்த வேதோப நிஷத்திலிருந் தென்றும் புலப்படவில்லை. கடல்நீரி லிவர் காட்டிய கணக்கின் படி உப்பையளந்து கொட்டிக் கலந்து வைத்தவர் வியாவகாரிக சத்தியக் கடவுளே யாகையால், அவர் இவரது பாரமார்த்திக சத்திலக் கடவுள் சந்நிதியில் பொய் யாய்ப் போகத் தட்டில்லை. அவர் பொய்யாய்ப் போகவே, அவர் கடலையுண்டாக்கினதும், கடல் நீரில் உப்பையளந்து சேர்த்ததும் வெறும் பொய்யென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/112&oldid=1590153" இலிருந்து மீள்விக்கப்பட்டது