உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் 26

மூடவுரை கூறிப் பதுங்கு வதைக் காட்டிலும் வேறு என்ன சமாதான மிவரெமக்குச் சொல்லப் போகின்றார்? வரது மதத்தின் றொடக்கம் ஆஸ்திகமும், முடிவு நாஸ்திகமுமாம். நாஸ்திகப் படுகுழியின் வாயை ஆஸ்திக மூடியா லலங்காரஞ் செய்திருப்பதால் இவரையொத்த சாமானியர்கள் அதில் வீழ்ந்து வாழ நேர்ந்ததெனவறிக. சுகமாய் வாழட்டும். நிற்க.

இவர் தனக்கு வரப் போகிற கதியை யறியாமல் தன் எதிரியை “இந்த முழுநாஸ்திகர்” என்று கைகூசாதெழுதியது. இவரதுவிசார புத்திக்கொத்ததேயாம். பதிபசு பாச பதார்த்தத் திரயங்களில் பாசமாகிய ஜகத்துமாத்திரம் உள் பொரு ளென்றும், ஏனையிரண்டு மில்பொருள்களென்றுஞ் சொல்லும் உலகாயதனுக்குத் தம்பியாய்ப் பசுவாகிய ஆன்மா மாத்திர முள்பொருளென்றும், ஏனையிரண்டு மில்பொருள் களென்றும் மாயாவாதமதம் பற்றிக் கூறுமிவருக்குப் புத்தி யிருந்தால், தன்னை ஆஸ்திகரென்றும், சைவர்களை நாஸ்திகரென்றுஞ் சொல்லாரென்க. மூன்று பொருள்களில் ஒன்றற்கே அஸ்தித்வ மொப்பிய உலகாயதனை நாஸ்திக னன்பது போலவேயன்றோ அவனைப்போல ஒரு பொருளினுக்கே (ஜநநமரண துக்க பந்தத்தில் வருந்தும் பொருளுக்கே) அஸ்தித்வ மொப்பிய மாயாவாதியாகிய இவரையும் நாஸ்திக ரென்றிடல் வேண்டும்? உலகாயதன் பாசத்தையேற்று மற்றவைகளுக்கு அஸ்தித்வ மொப்பாதது போல, இந்தப் பூர்வ பட்சி பசுவையேற்று மற்றவை களுக்கு அஸ்தித்வ மொப்பா மையால் நாஸ்திகசிரோமணி யாய்த்

தலைமைபெற்றோங்

கினாரென்பதி லோராசங்கையு மின்றென்க. பதிபசுபாச மெனப் பெயரிய உள்பொருள்கள் மூன்றில் ஒன்றினையும் இல் பொருளென்று கூறாமல் மூன்று முள்பொருள் களென்று கூறும் (முழு ஆஸ்திக) சைவரிடம் ஆஸ்திகப் பிச்சையேற்று இந்தப் பூர்வபட்சி க்ஷேமமடையத் தக்க புண்ணியம் இந்த ஜந்மத்திற் கிடைக்குமோ, எப்படியோ அறியேம்.

இனி யிவரொருகால் (உள்பொருள் ஒன்றே, மூன்று பொருள்களில்லை, அதனால் யாம் ஒரு பொருளுக்கே அஸ்தித்வமொப்பினோம், ஆகையால் யாமே ஆஸ்திகர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/113&oldid=1590154" இலிருந்து மீள்விக்கப்பட்டது