உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

81

வாதிக்கலாம். இவருடை தமையனாகிய உலகாயதனு மிப்படியே சொல்லுகிறானாகையால், இவரு வருடைய வார்த் தைக்குக் கனமில்லையென்றறிக. தமையான்- தம்பிகளாகிய இவ்விருவரில் பெரியவனே புத்திசாலியாய்த் தோன்று கிறான். எங்ஙனமெனின், அவன் ஒரே பொருள் உள்ளது என்று முதல் கூறியதினின்றும் புரண்டு பேசுகிறதில்லை. ஜகத்தையேயன்றி ஜீவபரங்களை மறந்துங்கூறான். சின்னவனுக்குச் சின்ன புத்தியே யிருப்பதால், ஒரே பொருளுள்ளது என்று முதல் கூறிய தினின்றும் புரண்டு ஜகஜீவபரங்களையும், புண்ணிய பாவங் களையும், சொர்க்க நரகங்களையும் உள்பொருள்களென்று சில சமயங்களில் பிரஸ்தாபித்து மானமழிகிறான். இவனெப் படியோ ஒரே பொருளைச் சாதிப்பவனாகலாம்? அல்லது மூன்று பொருள்களைச் சாதிப்பவனென்று தானிவனை யெப்படிச் சொல்லலாம்? இவனது வார்த்தை நிலையில்லாத மூடவார்த்தை யேயாம். இத்தகைய அஸங்காத்ம வாதத்தைக் கடைப்பிடித் தெழுந்து பூர்வபட்சி மானமழிவது அதிகபரிதாப மென்க. இப்படி யிவரெழுதும் ஒவ்வொன்றும் கல்லின்மேற் போட்ட கலமாயுடைபடுகின்றமையால், இவர் முதலிலெடுத் துக் கொண்ட வியாபகத்வாதிகளின் விசாரணை இவரது அந்ததமசின்பாலதாக முடிந்து நிஷ்பலமாகியதுணர்க. நிற்க.

இவர் இவரது சுவடியி னோர் மூலையில் "கடவுள் உள்ளும் புறம்புங் கலந்து நிற்பர்" என்று சொல்வது பிசகென்றும், அப்படிச் சொல்வதனால் அவர் இடை யில் இல்லையென்றாகிற தன்றோ வன்றும் தமது வல்லபந் தோன்றப் பிரசங்கித்திருக்கின்றார். சுருதி " అ స్తర్బహిశ్చతత్సర్వం వ్యా వ్యనారాయణ స్థితః என்று கூறியதன் பொருளென்னை? நாராயணர் உள்ளும் வெளியுங் கலந்திருக்கின்றாரென்று வேதங் கூறியது பிசகாயின், இவரது மதம் என்னாவது? சுருதி இப்படி யிருக்கு மென்று இவரறியார். அதட்டியாள அறிஞரில்லாவிடின் (Aறிஸ்த வர்கள் தங்கள் விவிலிய நூலை அடிக்கடி மாற்றி யெழுதுவது போல) இவரும் சுருதியைத் தமதிஷ்டம் போல மாற்றி யெழுதவுந் துணிவார் போலும். வேதநிந்தகராய் வெளிப் பட்ட இவரது அவலப் பிரசங்கத்தை ஸாதுக்கள் தியஜிப்ப ரென்க. அன்றியுமிவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/114&oldid=1590155" இலிருந்து மீள்விக்கப்பட்டது