உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

வேதாந்த மதவிசாரம்

-

89

நித்தியம் என்று ஆன்மாவைச் சைவ சித்தாந்திகள் கூறாமையை யாம் விதந்ததுநிற்க, வேறு சித்தாந்தி களாவது “எமது ஆன்மா சத்தான நித்தியம் அசத்தான நித்தியம் சதசத்தான நித்தியம்’ என்று தனித்தனிக்கூறிச் சாதிப்பதுண்டாயினன்றோ இவரவை களை மறுத்துச் செய்த து.ஷ்டப்பிரசங்கத்துக்கு ஒரு கௌரவ முண்டா கலாம்? ஒருவர் சித்தாந்தத்தையுந் தாக்கவலியற்ற மூட பிரசினைகள் செய்து வீண்சொற்களை நிரப்பி, அவைகளை மறுப்பதாகப் பயனில்லாத துடுக்கு வார்த்தைகளைப் பரப்பி இவர் செய்த ஜாலவித்தை இவரினத்தவர்க்கே பயன்பட்டு க்ஷேமமுண்டு பண்ணட்டும். இனியிவர் சத்தான நித்தியமா ஆன்மா? என்று கடாவி மறுத்த பகுதியையும் வெட்டிச் சாய்த்து ஸாதுக்கள் சந்தோஷிக்கச்செய்வாமென்க. ஜீவனை “சத்தாய் நித்தியமென்பாராயின், அநாதிசத்தாகியசிவன் பரிபூரண ராகலின், அந்தப் பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளி ருத்தல் கூடாது” என்று தருக்கியதே இவரது ஆசங்கையாம். இவர் சத்து நித்தியமென்று கொண்ட (சிவன் என்னும்) பொருள் பரிபூரணமாயித்தலே ஜீவனது சத்திய நித்தியத்வத்தை ரோதிக்கின்றது என்பது இவரதுமதம். இனிப் பரிபூரணம் என்பது நிறைவு என்று பொருள்படும். இதனால் சிவம் தானேயெல்லாமாய் நிறைந்திருப்ப தெனவும், அதில் இன்னுமொருபொருளிருத்தற் கிடமில்லை யெனவும், அப்படி யிருப்பதாயின், சிவமில்லாதவிடத்தில் அது இருக்க வேண்டு மனவும், இரண்டு பொருள்களில் ஒன்றிருந்த விடத்தி லொன்றிருக்க மாட்டாதெனவும், ஆகை யால் ஜீவன் சத்தான நித்தியமென்றல் கூடாதெனவும் பூர்வபட்சி மதம் வியக்த மாகின்றது. இதிலுள்ள வாபாசத்தை இனி விரிப்பாம். இவர் சிவம் சத்து-நித்தியமென்று கூறிய வரையில் எமக்காக்ஷேப மில்லை. பின்னர் பரிபூரணமென்று கூறியது இவர் மதத்தை வெட்டிக் கீழே புதைக்கத் தேடிக் கொண்ட தொடுகருவி (மண்வெட்டி) யாயதென்.க எங்ஙன மெனின், பரிபூரண மென்றபோது அதில், சிவம்-ஜீவன்-பாசம் என்னும் மூன்று

LOL

ங்கின. இவற்றுள் சிவம் நிற்க, ஜீவன் எண்ணிறந்தன. பாசம் திரிவிதம்; அன்றியும், தநுகரண புவனபோக காரியரூபங்களு மவையாம். இவையெல்லாஞ் சேர்ந்தே சிவபரிபூரணமென்ப திவரது மதம். சிவனே இப்படியெல்லா மாயினாரென்ப திதன் முடிவு. இவ்வாறு கூறும் அபசித்தாந்தியை நோக்கி நிர்மல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/122&oldid=1590163" இலிருந்து மீள்விக்கப்பட்டது