உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

  • மறைமலையம் - 26

இருப்பது. இது ஜீவன் அல்லது ஆன்மா என்று சொல்லப் படும். இந்தச் சீவன் சத்தையும் அசத்தையுஞ் சார்ந்து சத்தைச்சார்ந்த போது சத்தாயும், அசத்தைச் சார்ந்த போது அசத்தாயும் விளங்குகின்றானாகையால், இவனைச்

-

-

சதசத்தென்று கூறியது அமைதியாம். அசத்தாகிய பாசத்தைச் சார்ந்து அவ்வசத்து விகாரப்படும் போது, அவ்விகாரங் களாகிய புல் பூடு புழு - மரமுதலிய தொடங் கிற்பட்டு உழன்று கொண்டு “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி” பிறவுமாகிப் பிறந்து அவ்வசத்தினது விகாரத்தைத் தானும் மருவலால் ஆன்மாவினது பந்தநிலையை நோக்கி அதனை அசத்தென்ற படியாம். இவ்வான்மாத்தானே பந்த நிவர்த்தியிற் சித்தினது திருவடியைச் சாரும்போது, அச்சிவம் ஒரு விகாரத்தையும் மருவாமல் இன்பவடிவாய மர்ந்திருத்தல் போலத் திருவடிப் பேறு கைகூடி யொரு விகாரத்தையும் மருவாமையாகிய (பிறந் திறந்துழ லாமையாகிய) முத்தி நிலையை நோக்கி அதனைச் சத்தென்ற படியாம். இதனால் ஆன்மாவைச் சதசத்தென்ற வுண்மை யினைத்தென்று வெளிப்பட்டது. இவ்வாறு தெளிந்தாரவைக் கண்ணே, சத்து உள் பொருள், அசத்து இல்பொருள், சதசத்து உள்ளது மில்லதுமாகிய பொருள் என்று பூர்வபட்சி செய்து கொண்ட வியாக்யானம் துச்சமா யொதுங்குமென்க. இவரது அபசித்தாந்தம் நிலை பெறுவ தாயின், சத்து என்னும் ஒரு சொல்லேயன்றி, அசத்து-சதசத்து என்னுஞ் சொற்கள் சசவிஷாணம் என்னுஞ் சொல்லோடினப் பட்டுப் பொருளில்லாத புன்சொற்களா யழிவது மரபா மென்றுணர்க. அன்றியும், எஞ்சிநின்ற சத்து என்னுஞ் சொல்லை யுச்சரித்தற் காளில்லாமையும், அதனால் அச்சத்து என்னுஞ் சொல்லும் பயன்படாமையெய்தி யழிந் தமையும் பெறப்படலால், அச்சொற்குப் பொருளாகிய சிவமும் இல்பொருளாகிப் பரமநாஸ்திகப் பாஷண்ட ஞானமே தலை தூக்குமென்றறிக.நிற்க.

இவர்காட்டிய மூவிதநித்தியங்களில், அசத்தான நித்தியம், சதசத்தானநித்தயம் என்பவைகளின் விபரீதப் பொருள்களை இதுகாறும் விலக்கிச் சத்தான நித்தியத்தை விடுத்திருந்தோ மாகையால், அதனையும் ஈண்டெடுத்து விசாரித்து முடிவு கூறுவாமென்க. இவர் கொண்ட பொரு ளில் அசத்தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/121&oldid=1590162" இலிருந்து மீள்விக்கப்பட்டது