உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

87

மந்தபுத்தியில் தமதுமதியீனம் நன்கு புலப்படும். இவர் பிரமம் சத்தென்று கூறுகையில், இவரை யொரு நிர்மூடன் அந்தப் பிரமம் நித்தியமானசத்தா? அநித்தியமானசத்தா? நித்தியா நித்தியமானசத்தா? என்று கேட்டதாகக் கொள்வோம். அவனுக்கும், அவனது மூத்த தமையனாகிய இவருக்கும் பேத மென்னையோ? இப்படி வெறுஞ்சொற்களைத் தொடர்ப் படுத்தித் தெரியாதவரை யெல்லாம் ஏனோ இடர்ப்படுத்த வேண்டும்? பதி-பசு-பாசம் என்னும் இம்மூன்றுந் தனித்தனி யுள்பொருள்களே யாகை யால், இந்த மும் முதல்களும் சத்துப் பொருள்களேயாம். மூன்றுஞ் சத்துப் பொருளாகுகையில், சிவத்தைச் சத்தென்றும், பாசத்தை அசத்தென்றும், சீவனைச் சதசத்தென்றுஞ் சைவ நூல்கள் கூறுமா றென்னையெனின், அதனை விளக்குதும். சத்து, உள்பொருள். இது சிவம். இது தன்மை மாறாதிருப்பது. எனவே ஒரு விகாரத்தையு மெய்தாமலிருப்பது. அசத்து, சத்துப் போன்ற தல்லாமலிருப்பது, இது பாசம். இது தன்மை மாறிக் கொண்டிருப்பது. எனவே விகாரத்தை யடைந்து பொண்டே யிருப்பது. இது விகாரித்து வருதலே தநுகரண புவனபோகங் களாம். சத்து - அசத்து என்பன பிராமணன் - அப்பிராமணன் என்பவை போன்றனவாம். பிராமணன் பிராமணத்தன்மை மாறாதவன். அப்பிராமணன் பிராமணத்தன்மை மாறினவன். இப்படியே சத்தசத்துக்களையும் அறிந்திடுவர் மேலோரென்க. அப்பிராமணன் என்றவிடத்துப் பிராமணத்துவம் விட்டொழி ாழி யாதிருப்பது சத்திய மாயினவாறுபோல, அசத்தென்றவிடத்துச் சத்துத்தன்மை விட்டொழியா

L

திருப்பது சத்தியமாயினவாறறிக. அப்பிராமணன் என்ற விடத்தில் பிராமணனது அபாவமென்று பொருள்பட்டு ஆளில்லாமை சிறக்குமாயின், அசத்தென்ற விடத்தில் சத்தினது அபாவமென்று பொருள்பட்டு ஒரு பொருளு மில்லாமை சிறந்திடுமென்க. இவ்வுண்மை தேராது சத்து உள் பொருள், அசத்து இல்பொருள் அல்லது சூனியப் பொருள் என்று விசங்கிப்பாரது மதம் அசத்தின் பாற்பட்ட தெனலே அமைவுடைத்து, இனிச் சதசத்து - சத்தைப் போல் தன்மை மாறாமலும், அசத்தைப் போல் தன்மை மாறிக் கொண்டும் ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/120&oldid=1590161" இலிருந்து மீள்விக்கப்பட்டது