உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

பொருள்படும்

மறைமலையம் - 26

-

எனவும், “சதசத்தோ அது உண்மை யில்அசத்தேயாகும்” எனவும் பிதற்ற இடமிராது. அசத்தும் சதசத்தும் ஒரு பொருளிலேயே நின்று பயன்செய்வன வாயின், அசத்தென்னுஞ் சொல்லொன்றே போதும். சதசத்தென்னுஞ் சொல்லுக்குப் பிரயோசனமில்லையாம். அசத்து-சதசத்து என்னுஞ் சொற்கள் தாமரை கமலம் என்பன போலப் பரியாயச் சொற்களாயிடின், இவரது பிரசங்கம் ஒருவாறு தலைதூக்கும். அவைகளை இவர் பரியாயமாகக் கொண்டிருந் தால், “அசத்தா -சதசத்தா என்று அச்சொற்களை வேறு படுத்திக் கடாவுதல் செய்யாரென்க. சொற்பாகுபாடு ணரமாட்டாத இவ்வந்தகர் அவற்றின் பொருட் டிறமுணர் தலும், அதற்குமேல் அவற்றை மறுத்திடலும் விந்தையாகாது வேறியாதாம்? அன்றியும், இவர் சத்து உள்பொருள், அசத்து இல்பொருள், சதசத்து உள்ளதுமில்லதுமாகிய பொருள் என்று பொருள்கொண்டு தடுமாறியே சதசத்து உண்மையில் அசத்தேயாமென்று பிதற்றி யோய்ந்தார். இலதாகிய பொருளும், உளதுமிலது மாகிய பொருளு முண்டென் பாரது அவிவேகத்தைச் சுட்டெரிக்க எம்மால் முடியாதென்க. இந்தச் சொற்களின் பாகுபாடினைத் தெனச் சைவ சித்தாந்த முறைப்படிப் பின்னே கூறுதும். நிற்க.

-

.

ஈண்டிவர் தொடுத்த (ஆன்மா சத்தானநித்தியமா? அசத்தான நித்தியமா? சதசத்தான நித்தியமா?) என்னும் வாதத்தை முதல் விசாரித்தொழிப்பாம். சத்தான நித்தியம்- அசத்தான நித்தியம் சதசத்தான நித்தியம் என்னும் மூவித நித்தியங்களையும் ஆன்மாவுக்கொப்பிய சைவ நூற்கள் யாவை? இவ்வாறு சைவ நூல்கள் கூறுமாயினன்றோ இவர் சைவ நலத்தைத் தூஷிக்கமுந்தலாம்? ஆன்மா நித்தியம் என்றபிறகு அதனைத் சத்தென்பதொழிய (இவர் கொண்ட பொருள்களை யேற்று) அசத்து-சதசத்து என்று எந்த மூடனுஞ் சொல்லத் துணியானென்க. நித்தம் என்பதும் சத்து என்பதும் ஒரு பொருளிலேயே பரிவஸானத்தையடைவ திவரறியாமலே மருண்டுவாய்திறந்து அவலக்ஷண பிரசினைகளைச் செய்தா ரென்க. இவர்செய்த அசாஸ்திரீய பிரசினைகளை இவரது பிரமத்தின் மேலேற்றிக் காட்டினால், அப்போது இவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/119&oldid=1590160" இலிருந்து மீள்விக்கப்பட்டது