உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வேதாந்த மதவிசாரம்

85

என்று விரிந்தனர் சைவப் பெரியோரென்க. இதில் “பிறிதல்ல” என்றதே ஆன்மாவை நிஷேதித்தபடியாம். இதிற்றானே இந்திரவாதி - சந்திரவாதி - சூரியவாதி - ஹிரண்ய கர்ப்பவாதி சூரியவாதி-ஹிரண்ய வாசுதேவபரமாத்மவாதி முதலினோரது மதங் களடங்கும். இந்த மதவாதிகள் ஆன்மாவாகிய தன்னையும், பிறவான்மாக் களாகிய இந்திராதி களையும் பிரஹ்மமென்று பிரமித்து வாதிட லால் இன்னோர் யாவரையும் பசுக்கள் பரமென்று கொண்டவராகக் கழித்த படியாம். மேலே தொடங்கிய ‘பூதங்களல்ல" என்றதுமுதல் "மதியின்பேதங் களல்ல என்றதுவரையில் பூதவாதி முதல் அந்தக் கரண வாதியீறாகப் காரியங்களைப் பரமென்று கூறியவர்களை நிஷேதித்தபடியாம். இந்த வாதிகள் கொண்ட பொருள்கள் ஜடமாகையால், இவற்றில் வேறு பிரித்துக் காட்ட வேண்டிச் சித்தாகிய ஆன்மாவைக் கூறும் வாதிமதத்தை 'இவையன்றி நின்ற பிறிது' என்று விளக்கிய படியாம். இப்படி விசாரிப்பவரது சந்நிதியில் ஆன்மபரமான சுருதிகள் பூர்வபட்சமாயடங்குதலே சால்புடைத்தாமாறறிக. இப்படியிவர் தொடுக்கும் ஒவ்வொரு வாதமும் சூரியன் முன்னர் மின்மினிப்போ லடங்குதலால், இவரது துர்வாதத்தில் அறிவுடையோர் மயங்காரென்க.

பாச

ஸதஸத்விசாரம்

-

இனி, இவர் சத்து-அசத்து-சகசத்துக்களின் றன்மையை விசாரித்த பகுதியைச் சிறிது ஆராய்வாம். இவர் ஜீவன் எப்படி அநாதிநித்தியம் என்று ஆசங்கையெழுப்பி, சத்தாய் அநாதி நித்தியமா? அசத்தாய் அநாதிநித்தியமா? சதசத்தாய் அநாதி நித்தியமா? என்று தமதறிவினகலத்தை விரித்து அதற்குமேல் மூன்று விதமும் பிழைபடுவனவாகச் சில நியாயங்காட்டினார். இப்படி முடித்தவர் "இவ்வளவவலக்ஷணமுள்ள மதத்திற் புத்தியின்றிப் பிரவேசித்தும், வாயுங்கையு மாத்திரம் வெகு நீட்சியா யிருக்கின்றன" என்று தூஷித்துத் தமதடக்கத்தை வெளியிட்டுக் கொண்டனர். இவர் சத்து-அசத்து-சதசத்து என்னுஞ் சொற்களை யங்கீகரித்தேயன்றோ எம்மைக் கடாயினார்? அம்மூன்று சொற்களுக்கும் உண்மை யானபொரு ளிவரறிந்திருந்தால் அசத்தென்பது இல்லை யென்று

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/118&oldid=1590159" இலிருந்து மீள்விக்கப்பட்டது