உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

91

தோற்றமும், ஜடப் பிரபஞ்சத் தோற்றமு முண்டாமாறு யாங்ஙனம்? பிரமத்தினிடத்தில் யாருக்கு இவ்விதத்தோற்ற முண் ாகியது என்பதற்கு இவரது மதத்தில் சமாதானங் கிடைப்பதரிதாய் விட்டது. நிற்க. கயிறு அரவாய் விரிந்தது எனவும், அது பொருளாக விரியாமல் தோற்ற மாத்திரமாய் விரிந்தது எனவும், இவரே விரித்துக் காட்டினாரன்றோ? கயிறு எப்படி யிருந்ததோ, அப்படியே யன்றோ அரவின் றோற்றத் தையும் நாம் காண்கிறோம்? கயிற்றில் அரவின்றோற்ற மன்றிக் குதிரையின்றோற்றம்-மயிலின்றோற்ற முதலியவைகளை யாராவது காண்ப துண்டா? இங்ஙனமாக, பிரமத்தினிடத்தில் ஒருவிதமான தோற்றத்தை இருவிதமான (விஜாதியான) தோற்றத்தைப் பிரசங்கிப்பதன்றி இந்தப் பூர்வபட்சியார் பிரசங்கித்தவா றென்னை? கயிறு நீளமா யிருந்தால் பாம்பு நீளமாகத் தோன்றும். கயிறு சுருட்டிக் கொண்டிருந்தால் பாம்பு சுருட்டிக் கொண்டிருந்தவாறு தோன்றும். கயிறு வெள்ளை யாயிருந்தால் அது வெள்ளைப் பாம்பாகத் தோன்றும். கயிறு கறுப்பாயிருந்ததால் அது கறுத்த பாம்பாகத் தோன்றும். கட்டையினிடத்திற் கள்வன் தோன் றுவன். கட்டை யினிடத்திற் பாம்பு தோன்றுமா? கயிற்றினி டத்திற் பாம்பு தோன்றியவாறு அதனிடத்திற் கள்வன் தோன்றுவனா? எது

எப்படி

யிருக்கிறதோ அதனிடத்தில் அப்படியே தோற்ற முண்டாயிடுதல் அநுபவமாகவும், இதற்கு விரோதமாக நிர்விகாரமாகிய பிரமத்தினிடத்தில் விகார வடிவங்களாகிய சிற்சடப் பிரபஞ்சந் தோற்றமாகக் காணப் படுகின்றது என்னும் அஸங்காத்ம வாதம் எங்ஙனோமணம் பெறும்? அன்றியுங் கயிறு குட்டையாயின் சிறிய பாம்பும், நெட்டை யாயின் பெரிய பாம்புந் தோற்றமாம். கயிறு எவ்வளவு பரிமா ணமோ அந்த அளவுக்கதிகமாகப் பாம்பிறோற்ற முண்டா காது. இந்த வுபமானத்தால் பிரமத்தில் தோற்ற மாத்திரமாய் விளங்கும் சிற்சடப்பிரபஞ்சம் பிரமத்தின் பரிமாணத் தளவாயே விளங்காநிற்கும். இதனால், பிரமம் எவ்வளவு பெரிசு என்று கேட்பார்க்கு உலகம் எவ்வளவு பெரிசோ, அவ்வளவு பெரிசென்று விடை பகர்வதே இவரது தலை யெழுத்தாய் முடிந்தது. பிரமம் எப்படியிருக்குமென்று கேட் பார்க்குக் பிரபஞ்சம் எப்படி நாநாத்வமாகிய

விகாரமாயிருக் கின்றதோ அப்படியிருக்கு மென்றேயன்றோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/124&oldid=1590165" இலிருந்து மீள்விக்கப்பட்டது