உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 26

இனியிவர் விடையிறுத்தல் வேண்டும்? இவ்வநுபவத்தால் உலகத்துக்குப் பெரிசாகாமல் (ஆதீதப்படாமல்) இவ்வளவென்று அளந்தறியத்தக்க நிலையிற் கண்டப்பட்டு விகாரமாய் விளங்கும் பிரமத்தை அகண்டம் - பரிபூரணம் - நிர்விகாரம் என்று இவர் பிதற்றியதை எந்த வித்வான்க ளொப்புவார்கள்? பிரமத்தைப் போலவே உலகமும், உலகத்தைப் போலவே பிரமமும் ஒரேயளவினவாய் விளங்குத லிவரது ரஜ்ஜுஸர்ப்ப திருஷ்டாந்தத்தாலறிந்த விவேகிகளது ஸதஸில் இந்தப் புத்திமான் பிரமம் அகண்டம், பிரபஞ்சம் கண்டம் என்று ம் சொல்லித் தப்பித்துக் கொள்ளும்விதம் யாதோ அறியேம். இவரது விவர்த்தவாதம் இவரைத் தெருவிலே தியங்கவிட்டு அநர்த்தவாதமாய் முடிந்தது இவரது அதிர்ஷ்ட மேயாம். துகாறுங் கூறிய நியாயங்களால், பிரமம் வாஸ்த வமாக உலகமாய் விரிந்ததென்னும் பரிணாமவாதமும் பிரமம் தோற்றமாக உலகாய் விரிந்ததென்றும் விவர்த்த வாதமும் பிரமத்தை யல்லற்படுத்தி அசுத்தமும், விகாரமும், கண்ட முமாக்கி அதனது பரிபூரணத்தைப் பருந்துக்கிரையாக்கி விட்ட வாய்மை வெளிப்பட்டவாற்றிக. இவரது பரிபூரணம் வெறுந் தோற்றமும், தோற்றம் பொய்யுமாமென்று இவரே பிரசங் கித்தார். இதனால் பரிபூரணம் பொய்யென்பது இவரது மதமாகின்றது. ங்ஙனமாக, அனாதிசத்தாகிய சிவன் பரிபூரணராகலின்" என்று என்று இவர் பரிபூரணத்தைக் கௌர வித்தது என்னமதி? பரிபூரணம் மெய்யாயிருக்கும் பட்சத்தில், இவர் மதப்படிப் பிரமமிருந்தவிடத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடாது. பொய்யான பரிபூரணபிரமத்துடன் (பரிபூரணமல்லாத சத்துப் பொருளிருத்தல் ஏன் கூடாது? இவர் தோற்றத்தையே யன்றோ பரிபூரணமென்றனர்? தோற்றத்திற்கு அதிஷ்டான மாகிய பிரமத்தை (அதிற்றோற்ற முண்டாகாதபோது) பரிபூரண மென்றனரா? இல்லையே; இல்லாதபோது அத்துடன் சத்தான நித்திய ஜீவனிருப்பை அங்கீகரிக்க மாட்டேனென்றது இவரது அகந்தையின் பயனேயாம். அன்றியும், இவர் தோற்றமாகிய பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடா தென்றது நிற்க. தோற்றத்தைக் காண்பதற்கு ஆளேற்படாத போது அத்தோற்றப் பரிபூரணம் பிரமத்திலுண்டாயதென்பது

66

பிரமத்துடன்) மற்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/125&oldid=1590166" இலிருந்து மீள்விக்கப்பட்டது