உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

93

யாங்ஙனம்? உண்டாகாத பரிபூரணத்தில் மற்றொரு சத்துப் பொருளிருத்தல் கூடா தென்றது யாங்ஙனம்? வரது அபசித்தாந்தத்தை யாமங் கீகரித்திடினும், ஆன்மாவை அல்லது ஜீவனை நித்திய மென்றிடற் கோராசங்கையுமெழ இடமில் லாமற் போயின மையால், இவரது அகந்தைக்கே வியசனப் படுகின்றனர் ஸாதுக்களென்க. அன்றியும், இவர் பிரமம் உலகமாகிய பொருளாய் விரிந்ததென்னும் வாதத்தைப் பரிணாமமென்று கண்டுகழித்தாரன்றோ? அப்பிரமம் தோற்றமாய் விரிந்த விவர்த்தவாதமே தனது சொந்தமென்று இப்போது தருக்கிய தற்கு மாறாக இந்த விவர்த்தத்தை முன்னரோ ரிடத்தில் தோற்றப் பரிணாமமென்று சொல்லித் தாலைத்தார் தோற்றத்தைப் பரிணாமமென்று இவர் கண்டு கூறிய தற்கு ஆதரவு காட்டல் வேண்டும். இப்படியே தோற்றத்தைப் பரிபூரண மென்று கூறியதற்கும் நூலாட்சி வேண்டும். இவருளறுஞ் சொல்லெல்லாம் பிரமாணமாய் டுமா? பூர்வ மாயா வாதிகளுக்கு இவ்வித மோசவித்தைகள் தெரியா வென்க. நிற்க.

சுருதி "PTFPa•bspஜு” என்று போதிக்கின்றது.

இதனால் ஈசனும், அநீசனாகிய ஜீவனும் ஆகிய இருவரும் பிறவாதவர் களென்று பெறப்பட்டமையால், பிறவாத ஈசன் நித்திய மாயிடுதல் போலப் பிறவாத ஜீவனும் நித்தியமாயிடுதல் சித்தமென்றுணர்க. இந்த அர்த்தத்தையே " అజా మే కాంలో హితళ్ళుక్ల కృష్ణా என்னுஞ் சுருதியும் பிரதி பாதித்துப் பசுவை நித்தியமென்று ஸ்தாபிக்கின்றது. பசுவாகிய ஆன்மா நித்தியமாகாத போது பதியாகிய சத்துப் பொருளும். பாசமாகிய அசத்துப் பொருளும் வேத படித மாயிருத்தலில் ஒரு பயனுமின்றாம். பதியானது பாசத்தை யறியாது. பாசம் பதியையறியாது. ஒளி இருளை யறியாது. இருள் ஒளியை யறியாது. ஒளியையும் இருளையுங் கண்ணறி வது போலப் பதியையும் பாசத்தையும் பசுவே யறியுமென் றுணர்க. இந்தப் பசுவாகிய நித்தியப் பொருளும், பதியாகிய நித்தியப் பொருளுந் தம்மிற்கலந்து நிற்றலையே பரிபூரணம் என்று கூறும் வே முதலிய கலைகளென்க. "அக்கரங் களின்றா மகரவு யிரின்றேல் இக்கிரமத்தென்னுமிருக்கு” எனவும் “உயிர்க ளொன்றி -

6

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/126&oldid=1590167" இலிருந்து மீள்விக்கப்பட்டது