உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

94

மறைமலையம் - 26

66

5"

நின்றனனென்றுபன்மை நிகழ்த்துவதென்னை யென்னின், அக்கரங்கடோறுஞ் சென்றிடுமகரம் போல நின்றனன் சிவனுஞ்சேர்ந்தே” எனவும், ‘அகரவுயிர் போலறி வாகியெங்கு நிகரி லிறைநிற்கு நிறைந்து’ எனவும் சைவத்திரு வாளரது வாக்கியங்கள் பலவுள் இவ்வுண்மையையே அகர முதலவெழுத் தெல்லாமாதி என்றார் திருவள்ளுவ தேவரும், ககரமெய்யை அகரவுயிர் புணர்ந்து பரிபூரணத் தன்மை யெய்திய போது க- என்று வெளிப்படும். அகரத் துக்கு ஒரு மாத்திரை யொலியும், க் - என்னும் மெய்க்கு அரை மாத்திரையொலியுமாம். ஒன்றும் அரையுங்கலந்த

-

பகவன்முதற்றேயுலகு

போது ஒன்றரை மாத்திரையாக

வொலிக்காமல், க - என்னும் உயிர்மெய் அகரத்தைப் போல ஒரு மாத்திரையாகவே யொலித்திடல் அநுபவ மாம். இப்படியே சிவனையுஞ் சீவனையுமறிந்து இன்புறுவர் பெரியோரென்க. இனி அகரத்துக்கு ஒலியுண்டு. க்-என்னும் மெய்க்கும் ஒலியுண்டு. இரண்டொலியுங்கலந்து வெளி யாகும்போது அகரம் எப்படித் தன்னொலிக்கு அப்புறப் பட்டுப் போகாமல், க்-என்னுமெய்யொலியைத் தன்னில டக்கித் தனது பூரணத்தைப் பிரகாசப்படுத்திக் கொள்ளு கிறதோ, அந்தப்படியே சிவமும் ஆன்மாவுங்கலந்து வெளியாகும் போது சிவம் தனது வியாபகத்துக்கு அப்புறப்பட்டுப் போகாமல் ஆன்மவியா பகத்தைத் தன்னிலடக்கித் தனது பூரணத்தைப் பிரகாசப் படுத்தி யொளிருமென்க. இவர் ஆன்மாவினது வியாபகத்தை (காட்டன்பேல் - Cotton Bale) பருத்திப் பொதியைப் போல் ஞானம் பேசித் தடித்தனமாய் விவகரித்துத் தன்வரை யில் சந்தோஷித்துக் கொண்டது இப்போது என்னாயது? நிற்க. வேதாந்ததீபிகையென்னுஞ் சுவடியொன்றில், க-என்னு முயிர் மெய்க்கு ஒன்றரை மாத்திரை கூறாமல் ஒருமாத்திரை இலக்கண நூலார் கூறியது பிசகென்றும், அவ்வுபமானம் சிவசீவர் களிடத்திற் பொருந்தாதென்றும் பிரசங்கிக்கப்பட்டிருக்கிறது. அகத்தியம் தொல்காப்பிய முதலிய நூல்களை யழித்து இவ்வாபாசதீபிகைக்காரர் இனியொரு இலக்கணஞ் செய்து வெளிவந்த பிறகே இவரது வாதம் கேதம் பெறாது. இவருக்குத் தோன்றிய இலக்கண நியதியைத் தள்ளி ஏனோ அந்யதா

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/127&oldid=1590168" இலிருந்து மீள்விக்கப்பட்டது