உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

96

மறைமலையம் - 26

ணொளியற்ற வித்வான் யாதுகதி கண்டு கூறினர்? இவற்றுள், அந்தரியாமி" என்பதற்குத் தோற்றத்துக்கு அந்தரியாமி யென்பாரோ? விசுவாதிகர் = மாயாகரியதேகமெய்தாத வனெனவும், விசுவகா ரணர்=மாயை காரியப் படுதற்கு நிமித்த காரணராயிருப்ப ரெனவும், விசுவ ரூபி=மேலிருவித பிரபஞ் சங்களில் நிறைந் திருத்தலால், அந்தப் பிரபஞ்சமே திருமேனி யாக வுடையவ ரெனவும் பொருள் விரித்திடுதல் நியதமாம். விசுவகாரணன் பிரபஞ்சோற்பத்திற்கு அபின்னநிமித்தோ பாதானமானவன் என்று பொருள் கொண்டால், விசுவாந்திரி யாமி யென்பது விரோதப்படும். அன்றியும், விசுவரூபி என்பது கூறியது கூறலாய் முடியும். விசுவம் தானேயானபோது தன்னில் தான் அந்தரியாமியாயிடுதல் கூடாதாகையால், விசுவகாரணன் விசுவரூபி யென்பவற்றிற்கு யாம் கூறியவுரையே ஸாமஞ்சஸ மாயினவாற்றிக. நமது ரஜ்ஜுஸுர்ப்பபிராந்திக்காரருக்கும், மேல் சுருதிகளுக்கும் வெகு தூரமென்க. இந்தச் சுருதி களுக்குத் தப்பர்த்தங்கூறியும், அதட்டிக் கேட்டால் சுருதியும் மிச்சையென்பது வம்பளந்தும் உய்வகையிழந்து போவது அவரதியற்கையாகையால், இதை யிம்மட்டினிறுத்தி வேறொன் றினை யீண்டுவிரித்துச் சிவ பரிபூரணத்தைச் சிறந்திடச்

-

செய்வாமென்க.

பிரமத்தில் விவர்த்தமாக உலகுண்டாகியது என்றாலும், பிரமத்தின் பரிணாமம் உலகு என்றாலும், பிரமத்தினது காரியம் உலகு என்றாலும் பிரமத்துக்குப் பூரணத்வம் சித்தியாது. எங்ஙனமெனின், முதற்பட்சத்தை யோசிக்கின், நிர்விசாரமாகிய பிரமத்தினிடத்தில் விவர்த்தவிகாரங் கேட்கப்பட்டபிறகே அந்தப் பிரமத்துக்குப் பூரணத்வம் சித்திக்கின்றது. பிரமம் பரிபூரணம் என்று சாதிக்க வெழுந்து அது நிர்விகாரமென்பதை இழக்க நேர்ந்தது பரிதாபமென்க. விவர்த்தம் வெறுந் தோற்ற மாகையால் அதனிடத்தில் விகாரதோஷப்பிரஸ்தாபம் அஸப்ய மெனின், அவ்வெறுந் தோற்றத்தைப் பரிபூரண மென்று பிரசங்கிக்க வந்தது. அதனினும் அஸப்யமாகா தொழியுமோ? அன்றியும், அது தோற்றவிகாரம் என்னும் பெயர்பெறா தொழியுமோ? பூர்வபட்சி மதத்தை யங்கீகரித்த போதும் தோஷம் விலகியதின்றென்க. இன்னும் கயிறு எப்படியோ,அப்படியே பாம்பு விவர்த்தமாவது போலப் பிரமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/129&oldid=1590170" இலிருந்து மீள்விக்கப்பட்டது