உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

97

எப்படியோ அப்படியே உலகுவிவர்த்தமாயினதறிக.

உருவமுடையதும், கோணல் முதலிய விகாரமுடையதுமான கயிற்றில் உருவம் - கோணல் முதலிய விகாரத்துடன் பாம்பினது தோற்ற முண்டாகியபடியேயன்றோ உருவமுடையதும், பல விகார முடையதுமான பிரமத்தில் உருவமுடையதும் பலவிகார முடையதுமான பிரபஞ்சத்தோற்ற முண்டாக வேண்டும்? இங்ஙனமாக, பிரமம் உருவமில்லாதது என்று விவர்த்தவாதிகள் கூறுவது விவேகமாகுமா? ஒரு விருக்ஷத்தின் சாயையை நாம் பார்ப்போம். அதன் கிளைகள் - அக் கிளைகளின் கோணல்கள் அவற்றிலடர்த்தியாயுள்ள இலை முதலியவைகள் எப்படியோ, அப்படியே யன்றோ சாயையில் நமக்குப் புலப்படுகின்றது. மரத்தின் கிளைகள் நான்காயிருக்க அதன் சாயையில் கிளைகள் எட்டாய்த் தோன்றுமா? மரத்தின் இலைகள் அடர்த்தி யாயிருக்கச் சாயையில் லை களில்லாமல் தோன்றுமா? நிழலிற்றோன்றிய விகார மனைத்தும் விருக்ஷத்தில் நைஜம் என்பதை மறுப்பாருண்டோ? இப்படியே உலகத்தின் றோற்ற மனைத்தும் பிரமத்தில் நைஜம் என்பதை ஏனோ மறுத்திடுவர் நியாயமுணர்ந்தோர்? பிரமத்தினிடத்தில் சத்திய விகாராதி யுருவங்களை யொப்பி மானமழிய வேண்டிய விவர்த்தவாதிகள் மூடர்களை மயக்கி, பிரமம் நிர்விகாரம் - அரூபம் - சுத்தம் - அகண்டம் என்று வாய்ஞானம் பேசித் திரிவது இனி என்னா மோ அறியேம். இப்பேயர்கள் உலகம் கண்டம், பிரமம் அகண்டம் என்பதும் இனி எங்ஙனோ ஜீவிக்கும்? உலகத்துக்கும் பிரமத்துக்கும் ஒரேயளவு தேறிய துணர்ந்தவர்கள் கண்ட கண்ட பிரஸ்தாபத்துக்கு இடங்கண்டு ணர்த்துவதெங்கே? பிரமமொரு முதலும் உலகமொரு முதலுமாக இவரொப் பாதவர். அங்ஙனமொப்பின், பிரமம் அகண்டம் - உலகம் கண்டம் என்று கூறலாம். அநந்தரம் கண்டவுலகத்தை யியக்கு தற்கு அதிலகண்ட பிரமம் வியாபித்துவர்த்திகிற தென்னும் வாதத்தையு நிகழ்த்தலாம். அப்படிக் கொன்றுங் கூறாமல் பிரமமேயுளது, அதில் விவர்த்தவுலகந் தோன்றியது, அதின் றோற்றமே பரிபூரணம் என்று புலம்பும் வாதத்தைச் சிவ பரிபூரணத்வம் எங்ஙனம் நிலைப்பிக்கும்? இவ்விவர்த்த வாதி உலகவிரிவுக்குப் பிரமத்தை அதிஷ்டானமாக வொப்பி மையால் இத் தோற்றவுலகுக் கதிகமான வியாபகத்வம் அப்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/130&oldid=1590171" இலிருந்து மீள்விக்கப்பட்டது