உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மறைமலையம் 26

-

பிரமத்தினிடத்தி லுண்டென்று வாதிக்க இவரான் முடியா தென்க. இதனால் பிரமம் அகண்ட பரிபூரணம் உலகம் ஏகதேசவிவர்த்தரூபம் என்று இவர் கத்தியவாதம் இனிச் சீவிப்பது கஷ்டமாயினதறிக. நிற்க.

யாம் “மாயாவாதிமதக்குழப்பம்” என்று பெயர் கொடுத் தெழுதியதில் “ஆன்மா அல்லது பிரமம் வியாபகமுடைய ய தெனின், அதற்கிரண்டிரண்டாவதில்லாத போது அது வேறு எதில் வியபித்தது? எல்லாந் தானாயிடுதலே வியாபக மாகை யால் எதில் எது வியாபித்தது என்றது அடாதெனின், அப்போது வியாப்தி-வியாப்யம் என்னுஞ் சொற்களும் அவற்றின் பொருள் களும் என்னாவது” அன்றியும் எல்லாந் தானாயிடுதலே வியாபகமெனின், எல்லாம் என்றது பாச பசுக்களேயாம். தான் என்றது பதியாம். இப்படியேனோ அப் பதி பசுபாசங்களாக விரிந்தது? அல்லது வியாபித்தது? பாச மாகவும் பசுவாகவும் வியாபித்தபதி ஏனோ இன்னும் (பாச பசுக்களுக்கு வேறாய) பல பொருள்களாக வியாபித்தல் கூடாது? அங்ஙனம் பதிவியாபி யாமையால் அவ்வாறு வியாபிக்கத் தக்கவாற்றல் அதற்கில்லை யென்பது சித்தமாம். அதவா வியாபிக்குமெனக் கொள்ளின் அவ்வாறு வியாபிக்கு மெவ்வளவு வியாபகமும் அதனது வியாபகத்தின் அகண்ட மாகாமல் கண்டமேயாய் முடியும். அதனால் அது சர்வ வியாபகப் பொருளாதல் பூர்த்தி கட்டாது. இதனால் (சிவம்) தானே எல்லாமாயதென்னும் வாதத்தை யொழித்து, தான் என்னும்பதி எல்லாம் என்னும் பசுபாசங்களில் வியாபித் தலை யொப்புவதே பதியினது வியாபகதர்மமாம். பசு பாசங்களை யியக்குதற்கே பதி அவற்றில் வியாபித்தமையால் அதுவே பூரணமாம். பசுபாசங்களைத் தவிர வேறு பொருள் களில்லாமையால் பதிக்கு அவற்றின் மேலிட்ட வியாபகத்வம் கேட்கப்படவில்லை. பதியைப் போலப் பசுபாசங்களும் நித்தியமாகையால் இவற்றிற்கு அன்னியமாக பொருள்களின் பிரஸ்தாபம் சாஸ்திரங்களிலுண்டாக வில்லை. இவ்வாறு தெளிந்திடாத இவர் பதியினது வியா பகத்தை விசாரித்துச் சைவ சித்தாந்தத்தை மறுக்கப் புகுந்தது ஆச்சரியமாயதென்க” என்று பிரகாசப்படுத்தியிருக்கின்றோம்.

வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/131&oldid=1590174" இலிருந்து மீள்விக்கப்பட்டது