உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

99

இதற்குச் சமாதானங்கூறுபவரா யெழுந்த பூர்வபட்சி என்ன எழுதித் தொலைத்தார்? “பதி பசு பாச வாதம்” என்னும் அவரது பாழ்வாசகத்தில் “பதி பசுபாசங்களில் வியாபித்த தாய் இவரும் ஒப்புக் கொள்ளுகின்றார்? அத்வைதிகளும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். இவர் பொருளாக வாப்புக் காள்ளுகின்றார், அவர்கள் தோற்றமாக ஒப்புக் கொள்ளு கின்றார்கள், அத்வைதிகள் பொருளாய் வியாபகஞ் சொல்லா மையால் இவருடைய ஆக்ஷேபம் அவர்களைப் போய்த் தாக்காது என்று கூறினார். பதியானது பாசங்களில் வியாப்பித்ததாக யாம் ஒப்பினோம் என்பது சத்தியம் இந்த மூர்க்கவாதி அவ்வாறு ஒப்பிய தெங்கே? பதியானது பாசபசுக்களில் வியாபித்தது என்று யாமொப்பியதும் அவரொப்பியதும் ஒன்றாவதெங்ஙனம்? இருவர் கூறியது மொன்றானால் யாம் இவரது காதைப் பிடித்தாட்ட வேண்டிய ஆவசியக முண்டோ? நிற்க. இவர் “யாம் பொருளாக வொப்பவில்லை-தோற்றமாக வொப்பினோம்" என்றதினா லுண்டான வெற்றி இவருக்கு யாது? இவர் தோற்ற வாதத்தை மேலே யாம் துவைத்து நிர்முலமாக்கிய துணர்ந்தவர்கள் இவரைப் பிச்சரிற் பிச்சரா யொதுக்கப் பின்னிடையாரென்க. இவரது தோற்ற வாதந் தொலைந்து நெடுநாளாயினமையால், அதனை இவரடிக்கடி பேசி யேசப்படுவது பரிதாபமென்க. பரிணாம வாதிகள் இவரைப்போலத் தோற்றமாக வொப் பாமல் பொருளாகவே ஜகத்தையொப்பி அதற்கதிஷ்டானம் பிரமமென்று கூறுகை யால் இவரது தூஷணம் அவரையே சென்று சேருமென்க. பிரமமாகிய பொருள் உலகமாகிய பொருளாய்ப் பரிணமித்தது என்றபிறகு உலகத்தில் பிரமம் வியாபித்தது என்றிடற் கவகாசமில்லாமையால், அதுவும் சிவபரிபூரணத் துக்கு இடர் தேடிய சித்தாந்தமாகவே யொதுக்கப்பட்டவாறறிக. இந்தத் தோஷந்தானே பிரமம் உலகமாகக் காரியப்பட்டது என்ற ஆரம்ப வாதத்திலும் நேர்ந்து டர்ப் படுத்தியவாறறிக. வ்விருவாதிகளும் விவர்த்த வாதியைப் போலப் பிரமமே உலகுக்கதிஷ்டான மென்று கூறுகையால் இப்போது விரிந்த வளவில் பிரமத்தின் வியாபகத்தை இன்னோர் கட்டுப்படுத்தினா ரென்றிடல் ஸங்கதமாயிற்று. இந்த வாதிகள் சிவபரிபூரணத்தை விளக்கு

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/132&oldid=1590175" இலிருந்து மீள்விக்கப்பட்டது