உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் 26

வதிலெமொடுமாறுபடினும் “யாம் பொருளாக வொப்ப வில்லை” என்று பிதற்றிய அஸங்காத்ம வாதியை யடித்துத் துரத்து மாற்றல் வகித்த ஆப்தராயினா ரென்க. உலகத்தைப் பொருளாகவொப்புவதே சர்வமதசம்மத மாகையால் "இவருடைய ஆக்ஷேபம் அவர்களைப் போய்த் தாக்காது” என்று பூர்வபட்சி புலம்பியது வெறுங்கத்தா யொழிந்ததறிக. நிற்க.

இவர் ஏனோ “பசுபாசங்களாக (பிரமம்) விரிந்தது என்று யாம் கடாவியதற்குப் பொருளாய் விரியவுமில்லை வியாபிக்கவு மில்லை” என்று விடைகூறி எமது கேள்வி தகுதியற்றதென்று பரிகசித்தார். நாயை யெங்கடித்தாலுங் காலைத் நூக்குவது சுபாவம். அதுபோல இவரை எந்தக் கேள்வி கேட்டாலும் “யாம் உலகைப் பொருளாக வொப்பி னோமா? றோற்றமாக வேயன்றோ வொப்பினோம் என்று விடைகூறி யிறுமாந் திடுகின்றார். நல்லழகிது! இவரது அபசித்தாந்தத்தைத் தழுவியே பின்னுங் கேள்வி கேட்கின் றோம். ஏனோ பிரமத்தினிடத்தில் பசு பாசங்கள் தோற்றமாக வேனும் விரிந்தது? இவரது மதத்தைத் தாபித்ததற்கு இவர் தேடிய (கயிறு அரவாய் விரிந்த) உபமானத்தைச் சிறிதாராய்வாம் "ஏனோ கயிறு அரவாய் விரிந்தது” என்று கடாவெழின் மாலைக்காலத்தில் பார்ப்ப வனது கண் குற்றத்தால் அவ்வாறு விரிந்தது என்று விடை யுண்டாம். இப்படிப் போல வொரு சமாதானங் கூற வேண்டியது இவரது கடமையாகவும், இவர் விடை கூறாது வெற்றுரை பேசியது சத்துரையாகுமா? கயிற்றிற் பாம்பு தோன்றியது துன்பத்துக்கேதுவாம். பிரமத்திலுலகந் தோன்றியது அப்படி யாகலாமா? பிரமத்தினிடத்தி லின்பஞ்ச நிப்பதற்கு மாறாகத் துன்பஞ் சநித்தல் அதனதுயோக்யதை யையே வெளிப்படுத் தியது. எனவே, அது பிரமமன்றென்பது வெட்ட வெளி யாகியதுணர்க. அன்றியும், கயிற்றில் அரவின் றோற்றத்தைக் கயிறுக்கு வேறாகிய (கயிறல்லாத) வொருவன் கண்டு பிரமித்திடல் போலப் பிரமத்தில் உலகத்தோற்றத்தைப் பிரமத்துக்கு வேறாகிய (பிரமமல்லாத) வொரு பொருள்கண்டு பிரமித்திட லமையாமையால் இந்தவுலகமாகிய மலம் அப்பிக் கொண்டிருக்கும் அசுத்த பதார்த்தம் இவரது பிரம மென்று நிச்சயிக்கப்படுகின்றது. இன்னும் கயிறு-பாம்பின் றோற்றம் கண்டவன் ஆகிய இம் மூன்றும் ஒன்றல்ல, பிரமம் - உலகத்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/133&oldid=1590176" இலிருந்து மீள்விக்கப்பட்டது