உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

101

தோற்றம் காணும் பொருள் ஆகிய இம் மூன்றுக்குங் கதியென்னை; பிரமம் என்று பூர்வபட்சி கூறும் பொருளில் தோற்றக் காட்சியானது பிரமம் போலிராமல் ஜடவுலகும், ஜீவனுமேயாயினமையால்

அஞ்ஞானகலுஷித

அவர்

சித்தாந்தமாகத் துணிந்த பொருள் பிரமமென்னும் பெயர் மாத்திரம் பெற்றிருப்பதன்றி அதனிலக்கணத்தைப் பெற்றுப் பிறங்கியதின்றென்பது நாட்டப்பட்டது. இதனால், வேதம் கூறிய பதிபசுபாசங்களில் இவர் பதியைக் கோடலொழிந்து பசுபாசங் களைப் பரம் என்று துணிந்து, பசுவைக் கோடலால் ஜீவப் பிரஹ்மவாதியும், பாசத்தைக் கோடலால் மாயாவாதி யுமாயினரென்பது சித்தமாயினதறிக.

இவ்வாறு ஸ்ரீநாயகரவர்களெழுதி யுபகரித்தபகுதியை ம்மட்டி னிறுத்தினாம். இவ்வுயிர் வொப்பில்லாத நியாய ரக்ஷாமணிகளை ஸாதுக்கள் கொண்டு வாழ்ந்து சுகிக்கட்டும். இவ்வுண்மைகைைள யறியுந் திறனிருந்தும், அநுபவிக்கும் புண்ணியங் கைகூடாமையால் பூர்வபட்சிகள் ஸ்ரீநாயகரவர் களை இன்னுந் தூஷித்துக் கொண்டே யிருக்கின்றனர். எவரெவ்வாறு வைதுமகிழ்ந்திடினும் அதனை யொரு பொரு ளாக மதித்து வருந்தாமல் அவர்கள் குணப்பட வேண்டு மென்னுங் கருத்தையே முக்கியமாகக் கொண்டு ஸ்ரீநாயகரவர் களும், அவர்களை யாசிரயித்து வாழும் யாமுந் திருவருளை வாழ்த்தி வந்திக்கின்றோம்.

என்று தினகரனாருபசாந்தி யடைந்தனர். இனியிவ் விஷயத்தில் ஸ்ரீவைத்யநாத குருஸ்வாமிசாமா என்னும் எமது தோழர் சிலவரைந்தனர். அதனையும் ஈண்டெடுத்துக் காட்டி யுபகரிப்பாம்.

சாமா அவர்களது சீர்தூக்கம்

இந்து அவர்கள் சதசதத்து என்னும் பெயரின் பொருளை அறியாமல் அழுதுவழிந்து தடுமாறியதைப் பார்க்குந் தோறும் அவரது அற்பபுத்திக்கு யாம் பரிதவிக் கிறோம். அவர் தமது பிரசங்கத்தில் “சதசத்தென்று சொல்ல லாமெனில் சதசத் தென்பதன் பொருள் உளது இலது ஆதலாலும், ஒன்றுக் கொன்று நேர் விரோதமான இலக்கணம மையப்பெற்ற பொருள் இராதாதலாலும் சதசத்தென்று கூறுதலமையாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/134&oldid=1590177" இலிருந்து மீள்விக்கப்பட்டது