உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

102

மறைமலையம் - 26

என்று சொல்லியிருக்கின்றனர். மீண்டும் ஓரிடத்தில் சதசத் தென்னலாமெனில் “எதிர்மறையான ஒரு இலக்கணமுள்ள பொருள் இராது” என்றும், “நேர்விரோதமான இரண்டு தருமம் ஒரு பொருளிடத்திராது” என்றுங் கூறினர். மறுபடியும் சதசத்தென்றுரைக்கப்படுமாலோ எனின் மறுதலைப்பட்ட இரண்டு தருமம் ஒன்றின்கணிரா” என்று கூறினர். இப்படியே வேறு அநேகம் இடங்களிலுஞ் சொல்லியிருக்கிறார். இதனால் சதசத்து என்பதேகிடையாது என்றும், அப்பெயரும், அப்பெயர்க்குரிய பொருளும் ஒரு போதுமில்லை என்றும் சொல்லிவிட்டு, மற்றோரிடத்தில் “எது சதசத்தோ அது உண்மையில் அசத்தேயாம்” என்று சொல்லிச் சதசத்து என்பதை ஸம்மதிக்கிறார். இம்முரண் அற்ப புத்தியினது விளைவா? அல்லது அநிர்வசனீயமா? ஸ்ரீமந் மாணிக்க வாசக ஸ்வாமிகள் “இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே" என்றும் “எல்லாமாய் அல்லவுமாய்" என்றும், “சோதியனே துன்னிருளே” என்றும் நேர்விரோதமான இருதர்மங்களைக் கடவுளிடம் கூறுகின்றனரே? இதை யென் சொல்வார் இந்து?

66

“நிற்பவன் பொருட்டு வணக்கம் ஓடுபவன் பொருட்டு வணக்கம்” எனவும், “நாயானான் பொருட்டும், நாக்குப் பதியானவன் பொருட்டும் வணக்கம் எனவும் வேதம் ஸ்ரீபரமேச்சுரனைத் துதிக்கின்றதே. இதற்கு என்சொல்வார்

இந்து?

66

'தன்னையன்றி

ஒன்றுமில்லை” எனவும், தான் ஒன்றுமல்ல எனவுங் கூறும் உபநிடதத்துக்கு என்ன கதி?

இப்படி அனந்தமுளவாதலால் இருகுணங்கள் ஒன்றி னிடத்துக் காணப்படுவது ஸஹஜம். தகப்பனாகவும், மகனா கவும் அநேகரிவ்வுலகி லிருக்கின்றார்களென்றால். உடனே நமது இந்து அதுகூடாது என்று ததிங்கணத்தோம் ஆடுவாரோ? இவருக்கு மகப்பேறுண்டானால் இவர் தந்தையல்லவோ? இவர் ஒருவருடைய ய மகனல்லவோ? ஆகவே, இவரைத் தகப்பனும் மகனுமானவர் என்பது பிழைதானோ?

ஸ்ரீ சிவபெருமானை வழிபடும் எம் பெருமக்கள் சொல்லும் “ஸதஸத்து” என்னும் பொருள் மேற்கூறியபடியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/135&oldid=1590178" இலிருந்து மீள்விக்கப்பட்டது