உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த மதவிசாரம்

103

ஸத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அஸத்தாகவும், அஸத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஸத்தாகவும் விளங்கலால் அதற்கு அப்பெயர் சிறந்தவாறறிக

ஒரே

ஒரு

பொருளுக்கு ஒரே காலத்தில், காரணத்தினால் ஸத்தென்றும் அஸத்தென்றும் பெயர் யாருஞ் சொல்ல வில்லை. ஸதஸத்தென்னும் பதத்தின் பொருளை யுணராமல் தடுமாறும் இந்து என்பவர் ரூபாரூபம் என்னும் பதப் பிரயோகத்தைக்கண்டு பிராணனை விடாதவிதம் யாது? ரூபத்துடன் ஒப்பிடும்போது அருபமாகவும், அரூபத் துடன் ஒப்பிடும் போது ரூபமாகவும் உள்ளதே ரூபாரூபம். இப்படியே நிலையாமல் நிலைத்தல் முதலிய பலபிரயோகங்களுள்ள வற்றையுமறிந்து இந்து அவர்கள் குணப்படுவாராக. நிற்க. இந்து அவர்கள் "பரிணாமம் :முன்றுவகை (1) பால் தயிராவதொன்று (2) மண்கடமாவதொன்று (3) கயிறு அரவாவதொன்று” என்று கனைத்திருக்கின்றனர்.

ஐயோ பாவம்! தானுமறியார்;

தம்பெரியாரையுங் கேளார்; அன்னி யரைக் கண்டும் பொறார். இத்தகையாரை எப்படித் திருத்துவது? பரிணாமம் என்றால் திரிதல் என்றேபொருள். மரம்+ சாய்ந்தது மரஞ்சாய்ந்தது என்னுமிடத்துச் சகரத்தின் ஸந்தி விசேஷத் தால் மகரம் ஞகரமாகப் பரிணமித்தது. (இலக்கணத்தில் பரிணாமமென்று சொல்லவில்லை யாமே உதாரணத்துக்காக அப்பெயரிட் டோம்.) ஒன்று வேறொன்றாகத்திரிதல் (மாறுதல்) தான் பரிணாமம். அப்படியிருக்க, நமது இந்து அவர்கள் கயிறு அரவாவது ஒரு பரிணாம மென்கிறார். ஜாலக்காரன் பாம்புத் தோலைக் காட்டிப் பாம்பாக மாற்றுகிறான். நமது இந்துவோ கயிற்யையே பாம்பாக மாற்றி விட்டார். என்றாவது கயிறே பாம்பாக மாறுமா? காலத்திரயத்தும் மாறாது. கயிற்றைப் பாம்பாக எண்ணிப் பிரமிப்பவருண்டு. கயிறு ஒருநாளும் பாம்பாவதே கிடையாது. அப்படியிருக்க, அதை ஒரு பரிணாமமாகச் சொல்லி ஊளையிட்டார் நமது நண்பர். மீண்டுமவர் “கயிற்றரவுப் பரிணாமம் யதார்த்தமன்று” என்றுஞ் சொல்லுகிறார். பரிணாமமல்லாததைப் பரிணாமமென்று மோசமாய்ச் சொன்னது அற்ப புத்தியின் விளைவேயொழிய வேறன்று. இத்துடனாவது நின்று தொலைத்தாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/136&oldid=1590180" இலிருந்து மீள்விக்கப்பட்டது