உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

104

மறைமலையம் - 26

“இங்ஙனமே பிரமம் கயிற்றரவுபோல் உலகமாகப் பரிணமிக் கிறது” என்றுங் கூறுகிறார். கயிறு அரவாகமாறவே மாறாது. அதுபோல் பிரமம் உலகமாக மாறவே மாறாது என்றாயிற்று. இவ்வித மந்தமதியோ ப L மாயாவாதத்துக்கு வக்கீலாய்ப் புறப்பட்டனர்? ஐயோ பாவம்!

உண்மையில், பரிணாமம் பலவகை. பொருட் பரிணா மம் உருவப் பரிணாமம் - சினைப் பரிணாமம் -ஒலிப் பரிணாமம்- தொழிற் பரிணாமம் ஆதியாக உள்ளன. இவ்வகை ஒவ்வொன் றிலும் கிளைவகைகளும் உள. பால் தயிராவது மோர் கூடி; தயிர் மோராவது வெண்ணெய் குறைந்து. இனி வாளைப்பளம் என்பது ஒலிப்பரிணாமம். இப்படிப் பார்த்துக் கொண்டே போனால் பலவகைகள் காணலாம். நிற்க.

66

இவர் மற்றொருபுதுமை கூறினார். என்னெனின் 'தோன்றாமையின் சத்து எனல் அமையாது” என்று ஸத்தினிலக் கண முரைத்திருப்பதேயாம். தம்மை மறப்பவ ரா கிய இந்து அவர்கள் வேறோரிடத்தில் “கடவுள் இந்திரியத் தினாலும் மனத்தினாலும் ஜீவான்மாவாலும் காணப்படாத வரென்பது சித்தாந்தமாயிற்றென்க” என்று ஊளையிடுகிறார். ஆகவே, இவர் ஸத்தல்ல என்று கடவுளை ஒதுக்கி

விட்டவராயினர். அல்லது அஸத்தைத் தொழுபவராயினர். வேறு எவ்வாறாயினும் ஆகக்கடவர். இவரது பிரமம் ஸத்தல்ல என்றது நிச்சயம். இத்துடனாவது நின்று தொலைத்தாரா? “அஸத்தென்பது இல்லையெனப் பொருள் படுகின்றது” என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். கடவுளை அஸத்தென்றும், இல்பொரு ளென்றும் உளறிவழியும் இவரை அலகையென்று ஒதுக்கி விடுவதே எமக்குத் தருமமென்று இவ்வளவில் விடுத்தாம். இவருக்கு அநேகவித்தை தெரியும். இவரைத் தய்வம் கண்குருடில் லாமல் பிறப்பித்திருந்துங்

கண்ணுக்கொளி யில்லையென்று வாதிட்டுமாய்கிறார்.

கண்ணொளி

இனி ஒளி விஷயத்தில் உலகின் பொருள்கள் நால் வகை. ஒன்று சூரியனொளிபோல் அதிக பிரகாசமுள்ளவை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/137&oldid=1590181" இலிருந்து மீள்விக்கப்பட்டது