உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மறைமலையம் 26

டென்றார். இந்து என்பவர் அதை மறுத்து, கண்ணுக்கொளி யில்லை யென்றார். யாம் முன்னோரையும் வைதிக நூல் களையுமநுஸரித்து ஸ்ரீலஸ்ரீ நாயகரவர்கள் சொன்னது உண்மையென்றும், இந்து என்பவர் சொன்னது பிசகென்றும் மறுத்து நியாயங் கூறினோம். அதற்கு மேல் விஜயபாநு என்பவர் தோன்றி “சூரியனது சோதியாகிய பிரகாசத்தை ஒளியென்றும், இந்தச் சோதியாகிய ஒளி கண்ணுக்குக் கிடையாதென்றும் இந்து கூறுகிறார்” என்று இந்துவைப் பரிந்து பேசினார். சோதி, பிரகாசம், ஒளி என்பவை ஒரே பொருளுள்ளனவா வேறு வேறா? 'ஏண்டா நாழி கழித்து வந்தாய் என்று கேட்ட த உபாத்தியாயருக்கு 'நாழியாய்ப் போயிற்று' என்று போல இவரது பெற்றதறிக. சூரியனைப் போல் கண்ணுக்கொளியில்லை, என்ற சிறுவாக்கியத்துக்குப் பதிலாக அகராதிகளிலுள்ள பிரதிபதங் களை இவர் அநாவசியமாய்க் கொட்டியளந்தது சுருங்கச் சொல்லி விளங்க வையாததையும், பயனில் சொல் பாராட்டு தலையும் இவரது தலையிலுள்ள காயங்களாக நிலைப்பித்து விட்டது. சூரியன் போன்ற அவ்வளவு ஒலி கண்ணக்குண் டென்று எமது நாயகரவர்கள் சொன்னதுண்டா? கண்ணுக்கு ஒளி யுண்டென்பது மட்டும் நாயகர் கூற்றென்று யாம் முந்தியே கூறினோம். அதை இவர் கவனித்திலர். நிற்க.

66

மாணாக்கன் பதில் சொன்னானாம். வார்த்தை

கனம்

இவர்

கதிரவனுக்கே ஒளியுண்டு. கண்ணுக்கொளியில்லை என்றது இந்துவின்மதம். கதிரவனுக்கு ஒளியுண்டு, கண்ணுக்கும் ஒளியுண்டு. ஆனால், இவை ஏற்றத் தாழ்வுடை வை ஏற்றத் தாழ்வுடையன என்பது எமது மதம். எமக்கு மேல் கோட்டி யெழுதிய வைத்யநாதரோ எனில் காகிதம் முதலியவற்றின் பளபளப் பாகிய மேனியையே ஒளியென்றும், இந்தப் பளபளப்புத் தருமம் கண்ணுக்குண் டென்றும் கூறுகின்றார். இதனால் இந்து சோதியை ஒளியென்றும், வைத்யநாதர் மேனியை ஒளியென்றுங் கூறியதாக விளங்குகின்றது. என்று பிரசங் கித்தார். மேனியென்றால் பொருளென்னை? தேகத்தின் மேல் பரப்பா? அப்படியானால் நாம் மேனியைப் பற்றிக் கூறவே யில்லை. மேனியென்றால் நிறமா? நாம் நிறத்தைப் பற்றிக்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/139&oldid=1590183" இலிருந்து மீள்விக்கப்பட்டது