உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

107

கூறவேயில்லை. மேனியென்றால் பின்னர் என்னை? ஒளியே யன்றோ? பளபளப்பு, மேனி, ஒளி, மினுக்கு, மின்னல், சோதி காந்தி, பிரகாசம் என்னும் எந்தப் பெயரைச் சொன்னாற்றா னென்னை? இவற்றில் யாது வித்யாஸங்கண்டாரோ விஜய பானு? மேனி, ஒளியின் ஆதரவைப் பெற்று விளங்குவதாம், ஒளி தானே விளங்குவதாம். இது தவறு. இப்படியுள்ள வித்யாசத்தை ஒத்துப் பார்த்து நாம் பதார்த்தங்களுக்கு ஒளியுண்டெ டனக் கூறினோமில்லை. ஒளியென்றால் இன்னது என்று பானுவுக்குத் தெரியவில்லை யென்பது இன்றுதான் வெட்ட வெளியாயிற்று. ஒளியின் வகை தெரியாத இவரை யம்ப்ரஹ்மமென்று தான் சொல்ல வேண்டும். இவ்வொளி விஷயம் தெரியாதவர் களுக்குச் சொல்லப் புகுந்தால் வெகு கஷ்டமாகுமானதால் எடுத்த விஷயத்தை யொருவாறு, முடிப்பாம்.

66

ஒளி தானாய் விளங்குவது. இது அநுபவப்ரமாணம், கண்ணாவது, கடிதக் கண்ணாடியாவது இருளைப் போக்கு கின்றதா” இதனால் கண்ணுக்கு ஒளியில்லையென்பதும், அவ்வொளியைக் கண்ணுக்குரியமேனியோடு உவமிப்பதும் அடாதென்பதே முடிபு என்றார்பாது. இதிலிருக்கும் ஆகாரம், தீர்மானம் இவைகளைப் பண்டிதரே பார்த்துப் பரிசு

கொடுக்கட்டும்.

ஒளி தானாய் விளங்குவது என்றாரே! பதினாயிரம் சூரியர்கள் ஏககாலத்துதித்தாலும், இவர் குருடாகயிருந்தால் இவர் சொல்லும் ஒளி இவருக்குத் தானாய் விளங்குமோ? சூரியனுக்கு மட்டும் இவர் சம்பாதித்துக் கொடுத்த வொளியை அவன் எம்மட்டில் அனுபவித் திருக்கிறான்? கண்ணுள்ளவ னுக்கும், பார்வை குறைந்தவனுக்கும், பார்வை மழுங்கின வனுக்கும், முழுக்குருடனுக்கும் ஓரேயளவாய் ஒளிவிளங்கினா லல்லவா “ஒளி தானாய் விளங்குவது" என்ற ஆதாரத்தைப் பற்றிக் கொண்டு தீர்ப்புச் சொல்லலாம்? கண்ணாடி, காகிதம், ஜலம், படிகம், வைரம், அனல், மதி, சூரியன், கண் முதலிய எல்லாவற்றிற்கும் ஒளியுண்டு. ஆனால் அவை தாரதம்யமுடை யனவாம். “கண்ணானது சூரியனைப் போல் பதார்த்தங்களைக் காட்டுகிறதா? ஆதலால் அதற் கொளியில்லை” யென்பதும், சூரியனானது கண்ணில்லாத வழி ஒளியுள்ளதா? ஆதலால்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/140&oldid=1590184" இலிருந்து மீள்விக்கப்பட்டது