உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மறைமலையம் 26

சூரியனுக்கொளியேயில்லை" யென்பதும் தப்பிதமாகும். உண்மையில் இரண்டுக்கும் ஒளியுண்டு, இவற்றில் எது இல்லாவிடினும் ஒளியென்னும் அறிவே ல்லாததாகும். ஒளியில் தாரதமயமில்லை யென்றும், ஒளியென்றால் சூரிய னொளி ஒன்று தான் என்றும் எண்ணிக் குழறிவழியும் இவர் சூர்யன்-சந்திரன்-அக்னி-மின்மினி வைரம்-கண்ணாடி முதலிய வேறு பாடுகளில் எதை மேனி என்பார்? எதை ஒளியென்பார்? ஒருமரம் (சோதிமரம்) இரவில் பிரகாசிக்கின்றது. அதை மேனியென்பாரோ? மினுக்கென்பாரோ? ஒளியென்றுதான் சொல்லித் தொலைப்பாரோ? அறியேம்.

ஐதரேய உபநிடதத்திலிருந்து நாம், கண்ணுக்கொளி யுண்டெனக் கூறியிருந்தோம். அது இவர் புத்திக்கெட்டிய தில்லை யாதலால் நாம் சொன்ன பொருள் திரிபு கொண்டது என்று பேசினர். “ஒவ்வொருவர் கண்களிலுமிருந்து சூரிய னுண்டாய்விட்டால் இருக்குஞ்சூரியனுக்கு என்னவழி தேடுவது? ராஜீநாமாதான் கொடுக்க வேண்டிவரும்" என்றார். ஐயோ சற்று நிதாநித்துப் பாராததால் வந்த குறைவே இது. விராட் புருஷனுடைய கண்ணினின்றும் ஒளியும், ஒளியி னின்றும் சூரியனும் உதித்ததாக உபநிடதம் சொல்லுகிற தேயன்றி, பீளையும் உவர்நீரும் மலிந்த (இவர் போன்றவரது) புன்புலாற் கண்ணினின்றும் ஒளியும், ஆதித்யனும் பிறந்ததாகச் சொல்லவில்லை. ஒளியோ ஸர்வ வியாபகமுடையது. அது கண்ணில்லையென்றும், ஆதித்த னில் மட்டும் இருக்கிற தென்றும் பிதற்றியது பேதமை யேயாம். நிற்க.

சூரிய ஒளியே ஒளியென்று கூச்சல் போட்ட பாது அவர்கள் நெருப்பு, மின்மினி முதலியவற்றை ஒளியுள்ளன வாகப் பேசினர். இதையுங் கொஞ்சம் ஆலோசிப்பாம். ஸ்ரீ ருத்ரமூர்த்தி எப்படி ஸர்வவியாபியோ, அப்படியே அக்னியும் ஸர்வவியாபி. அக்னியுள்ள இடமெங்கும் ஒளி யுண்டு. இந்த ஒளியே பஹிர்ப்பூதமான நெருப்பினிடத்தும், அது போன்ற நீரினுள்ளும், அது போன்ற பிருதிவியினிடத்தும் விளங்கு கின்றது. இது சூரியனுக்கு மட்டும் என்றும், மற்றொன்றுக்கு மட்டும் என்றும் சொல்வது ஒருபோதும் உண்மையன்று. எல்லாவற்றிற்கும் பொது வென்றறிந்து குணப்படுவாராக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/141&oldid=1590185" இலிருந்து மீள்விக்கப்பட்டது