உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

133

உளவென்று உய்த்துணர்ந்து கோடல் ஒருவாற்றானும் வழுவா மாறில்லை; யாண்டுக் குடமுளது ஆண்டதன் சத்தியும், அச்சத்தியைப் புலப்படுத்தும் சத்தியும் உளவென்னும் பிறழ்ச்சி யுணர்வோடு கூடாவியாத்தி யுணர்ச்சியுண்மையா னென்க. இனி மற்றொருசாரார் இறைவன் அளவிறந்த சத்தியுடைய னாதலான் இல் பொருளை யுள்பொருளாகவும் உள்பொருளை யில்பொருளாகவுஞ் செய்தற்கண் இழுக்கின் றாகவும் ஆன்மாக் களும் ஆணவ முதலியமலங்களும் அனாதியே யுளவென்றெம்ம னோர் கூறுதல் பொருந்தாதென்ப. அவரு மறியார் என்னை? முன்னோதியவாற்றாற் சத்தியென்பது ஒரு பொருட்கண்ண தாய்ப் பிறிதொருபொருட்கணுள்ள சத்தியை யெழுப்புவ தூஉம், மற்றதனைத் தடைப்படுத்துவதூஉமென்னுந் தொழின்மை யுடையதாகலா னென்பது. இறைவனிடத் துள்ள சத்தியும் அறிவுப் பொருளாயுள்ள அவ்வான் மாக்கட்கு அவ்வறிவை யெழுப்புவதூஉம், இயக்கப் பொருளாகிய மலத்திற்கு அவ்வியக்கத்தை யெழுப்புவதூஉம், மற்றச் சத்திகளியங்காவாறு தடைசெய்து நிற்றலு முடையது. இப்பெற்றித்தாகிய சத்தியே சத்தியெனப்படுவதல்லது பிறிதன் றாகலான், இதனைப் பிறவாறுரைப்பார்கூற்றுப் போலியா மென்றொழிக. இதனை யீண்டெடுத்து விளக்கியது தன்னின முடித்தலென்னு முத்தியாம் என்றித்துணையுங் கூறுதலான் மாயாவாதி, விவர்த்தவாதி, பரிணாமவாதி, சிவாத்துவிதி முதலி யோர் கூறும் மயக்குரையான் மயங்கிச் சித்தாந்த சைவத்துறையி லெடுத்துக் கொள்ளப்படும் சத்தியினிலக்கணங்களாகிய ஆணிமுத்துக் களை யிழவாது பெற்றுக் களிப்புறுவதே பயனா மென்க. இம்மட்டோ, இம் மாயாவாதப்படிறரது கோலா காலத்திற் களவில்லை. எமது நாயகரவர்கள் ‘அகரமுதல' என்னுந் திருக்குறளுக்கோர் அரியவுரையெழுதி யுபகரித்திருந் தார்கள். சோமனைப் பார்த்துத் தலைவீங்கிய பிராணியாகிய இவர் “முதற்குறள் வாதம்” என்றொரு வழுவாசகத்திரட்டை வெளிப்படுத்தினர். அதனை மறுத்து யாம் “முதற் குறள் வாத நிராகரணம்" என்னும் வைரத்தம்பம் நாட்டியுள்ளேம்.

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/166&oldid=1590213" இலிருந்து மீள்விக்கப்பட்டது