உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

சு

மறைமலையம் - 26

வெறும் பொய்யே யாமென்றும், இன்னோரன்னவெல்லாம் அனுமானப் போலியாமென்றும், உண்மையனுமானத்தா னுணர்வதே மெய்ப்பொருளுணர்ச்சி யெய்துதற் கேதுவா மென்றும் கூறிச் சத்தியுங் காரியமும் யாண்டுமில்லாத மிச்சைப் பொருள்களே யாமென முடிவுரையுங் கூறினார். சிறுமகார் நகையாடுந் திறத்தாற் கூறிய விவர துரைத்திறத்தை யுற்று நோக்குவார்க்குக் கடமென்பதும் உலகமென்பதும் மிச்சைப் பொருள்களாய் முடிவுழி யவற்றாற்சுட்டப்படும் குயவனது வனைதற் சத்தியும் இறைவனது கிரியாசத்தியும் பெறப்படா மையான், அவற்றையுணர்வதற்குக் கருவியாமென்ற அனுமான முதலிய பிரமாணங்களு மில்லையாய் அவற்றை யுணர்த்தி வைத்த தருக்க நூல்களும் போலியாமென்பதும் நன்கு விளங்கும். தருக்க முதலிய நூல்களும் அவற்றுட் கூறப்படும் அநுமானம் முதலிய பிரமாணங்களும் பொய்யொழிந்தவழி எதார்த்த வநுமானமென வொன்றுண்டா மென்பது வெறுஞ் சொன் மாத்திரையே போலும். அசத்துப் பொருளை அநித்தப் பொருளென்று துணிவதற்கு மாறாக அதனை அபாவப் பொரு ளென்று துணிந்தது விலங்குணர்ச்சி போலாமென்றுணர்க. குடங்காரியவுருவாக இருந்த வழி அநித்தமென்றும் காரண மான பரமாணுவுருவாகத் திரிந்த வழி நித்தப் பொருளா மென்றுந் தருக்க நூல்களிற் கூறப்படுதலை யிவர் அறிந்தார் வாய்க் கேட்டறியாமை பெரிதும் இழுக்குடைத்தாம். இனிப் பனித் தோன்றியவழி அதனைப் புகையென்று காணுதல் பிரத்தியட்ச வாபாசமாம். அப்பிரத்தியட்ச வாபாசத்தின்வழி யுய்த் துணரப்படும். அநுமானமும் ஆபாசமாம். பிரத்தியட்ச வுணர்வு சவிகற்பமாய் நிகழ்ந்து துணியப்பட்ட விடத்து அதன் வழியே யநுமான வுணர்வு நிகழ்வதன்றிப் பிரத்தியட்ச வுணர்வு ஐயவிபரீதங்களுடன் நிகழ்வுழி யதன்வழித்தாக அநுமான வுணர்வு நிகழ்தலேலாதாமென்க. இதுபோலக் குடத்தைக்கண்டு குடமென்றே பிரத்தியட்ச வுணர்வு சவிகற்ப வுணர்ச்சி யோடுடன் நிகழ்ந்தவழி மற்றவ்வுணர்ச்சி யாற் குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்தும் வனைதற் சத்தி குயவனிடத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/165&oldid=1590212" இலிருந்து மீள்விக்கப்பட்டது