உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* வேதாந்த மதவிசாரம்

6

131

அன்னி

னவரதின்ப நுகர்ச்சிக்கு அவர் தம்முட்டாமே காரணராதல் பெறப்படுத லானும், இதனை ‘இருவரின் முடியுமொருவினை’ என்பவாகலானு ன்னோரன்ன வெல்லாம் யோன்னி யாச்சிரயக் குற்றமாதல் செல்லா தென்றொழிக. அற்றேலஃ தாக, குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்துள்ள தன்றுரைத்த தென்னை, சாத்தனி டத்துள்ள வனைதற் சத்தியே மண்ணினிடத்துக் குடமாகக் காரியப்பட்டெழுந்ததா லெனின்;-அறியாது கடாயினாய், சாத்தனிடத்துள்ள வனை தற்சக்தியே மண்ணினி டத்துக் குடமாகக் காரியப்பட் டெழுந்த தென்பார்க்கு அச்சத்தி நீரிற்சென்ற வழியுந் தீயிற்சென்ற வழியும் வாயுவிற் சென்ற வழியும் ஆகாயத்திற் சென்ற வழியுங் குடமெழுதல் வேண்டும், அங்ஙனமெழுதல் காட்சிவகை யானுங் கருத்துவகையானு மறிப்படாமையிற் குடமாதற்கேற்ற சத்தி மண்ணின் மாத்திரமே யுளதென்றும், அது சாத்தனிடத் துள்ள வனைதற்சத்தியோ டியைந்தவழிக் குடமெழுமென்று முணர்ந்து கொள்க. இதனாற் சற்காரிய வாதங்கொள்ளு மெமது சித்தாந்தசைவமே நிலையுதலுறுமாறும், சிவாத்துவித சைவரும் மாயாவாதியரு ளொருசாரா ருங்கூறு மசற்காரிய வாதம் அழிவுபடுமாறுங் கடைப்பிடிக்க. இங்ஙனந் தருக்க நெறியோ டொத்துத் தலையாய அறிவினோ ரெல்லார்க்கு மினிது விளங்கக் கிடக்கு மிதனை மாயாவாதி யருளொரு சாரார் பாகுபடுத்துணராது எல்லாப் பொருள் களும் சத்தியினின்றே தோன்றினவென்ற கூறுதலினவருரை பொருந் தாதா மென்று மறுக்க. இனிப் பிரமவித்தியாப் பத்திரிகையு ளொருவரெழுந்து சத்தியி னிலக்கணங்களைச் செவ்வனே விரித்து விளக்குமதுகையின்றிக் குழறுபடையாகச் சிலவரைந்து, கடமென்பது சத்தின்பாலதா அசத்தின் பால தாவென்று காரணகாரிய முறைப்படி யாராயப்புகுங் கால் சடமென்பதே முக்காலத்துமில்லாத மிச்சைப் பொருளென்பது முடிந்ததாகலி னக்கடசத்தியுமதனை வெளிப்படுக்கும் வனைதற் சத்தியு முளவாமா றியாண்டு மின்றா மென்றும், கடத்தோற்றமுள தாகலினதுபற்றி யச்சத்தியுமுள தென்று கோடுமெனின் பனியைப்புகையென்றே மருண்ட வுணர்வினானது கொண்டே தீயில்லாவிடத்துத் தீயுள தென்று நிறுவப் புகுந்தவாறுபோல

பாலதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/164&oldid=1590211" இலிருந்து மீள்விக்கப்பட்டது