உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் - 26

பொருளும் அப்பொருட்சத்தியுந் தம்முட் சமவாய சம்பந்த முடையவாகலா னொன்றினொன்று பிரிந்து நிற்குமாறு அவற்றைப் பிரித்தவழி யவை யங்ஙனம் பிரிந்து நில்லாது ஒருங்கேயழிந்து படுமென்பது காட்சி யளவையாற் று ணியப்படும். எனவே, சத்தியென்பது ஒரு பொருட் குணமாய் அப்பொருடோன்றுங் காலத்து டன்றோன்றி யஃதழியுங்காற் றானு முடனழிவதாமென்க. ஒரு பொருட்க ணுள்ள சத்தி மற்றொருபொருட் சத்தியோடி யைந்து அதனைப் புலப்படுக்கும் வழித்தானும் புலப்பட்டு நிற்குமாமென்பதூஉம், அப்பொருளோ டிணங்கியதன் சத்தியைப் புலப்படுத்தாதவழித் தானும் புலப்படாது தன்பொருளிற்கரந்து கிடக்குமா மென்பதூஉம், இங்ஙனம் ஒரு பொருட்சக்தி புலப்பட்டு நின்றவழி யச்சத்தியையுடைய பொருள் தொழிற்படுகின்ற தெனவும் அப்பொருட்சத்தி புலப்பட்டு நில்லாவழியப் பொருள் வறிதே கிடந்ததெனவுங் கூறப்படுமென்பதுதூஉம் விளங்குமாறு ஒன்றன்மேல் வைத்துக் காட்டுதும், ‘சாத்தான்மண்ணாற் குடத்தை வனைந் தான்' என் புழி வனைதற்சத்தி சாத்தன் கண்ணும் குடமாதற் கேற்ற சத்தி மண்ணினிடத்தும் புலப்பட்டுநின்றன. வனைதற்சத்தி சாத்தனிடத்தினின்றும் வெளிப்படாதாயின் குடமாதற் கேற்ற சத்தி சத்தி மண்ணினி டத்தும் வெளிப்படாதாம். சாத்தனதுவதைத்ற்சத்தி வெளிப் படுங்கால் அவன் முயற்சியுடைய னாயினானென்றும், அவனிடத்தச் சத்தி விளங்காதாயின் அவன் வறிதே யிருந்தா னென்றுங் கூறுப. எனவே, சாத்தனதுவனைதற்சத்தி வெளிப் படுதற்கு மண்ணினது குடமாதற் கேற்ற சத்தியும், மண்ணினது குடமாதற்சத்தி வெளிப்படுதற்குச் சாத்தனது வனைதற்சத்தியுந் தம்முட் காரணமாம். அற்றேலிவை யொன்றையொன்று நோக்கித் தம்முட்காரணமாயியைதலி னிங்ஙன முரைத்த லன்னி யோன்னி யாச்சிரயக் குற்றமாகா தோவெனின்:- அற்றன்று, ‘தலைவன் றலைவியோடின்ப நுகர்ந்தான்' என்புழி யின்ப நுகர்ச்சி யிருவர் கண்ணுங் கண்ணுங் காணப்படுதலானும், தலைவியை யின்றித் தலைவனுந் தலைவனையின்றித் தலைவியுமின்ப நுகர்தல் ஒருவாற்றானு மமையாமையி

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/163&oldid=1590210" இலிருந்து மீள்விக்கப்பட்டது