உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை-1

முதற் பதிப்பின் முகவுரை

மக்கள் நூறாண்டு உயிர்வாழ்தல் எப்படி? எனப் பெயரிய இந் நூலை இற்றைக்கு இருபத்து நான்கு ஆண்டு களுக்கு முன் சளமிய வைகாசியில் எழுதத் துவங்கினேம். சென்ற முப்பத்தோராண்டுகளாக எம்மால் நடத்தப்பட்டு வரும் எமது ஞானாசாகரம் என்னுந் திங்கள் வெளியீட்டின் ஐந்தாம் பதுமத்து முதலிதழிலே இதன் முதலத்தியாயமாகிய 'நீண் வாழ்க்கை' என்பது வெளிவரத் தொடங்கியது. அவ் வைந்தாம் பதுமத்தின் மற்றையிதழ்களிலும் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்தாம் பதுமங்களின் இடை இடையேயும் வெளியாகி வந்த இதன் மற்றை அத்தியாயங்கள். யோக நித்திரை. மனித வசியம் என்னும் எம்முடைய ஏனை நூல்களை அப்போது விரைந்து முடிக்க வேண்டி யெழுந்த இடையூற்றால் அப் பத்தாம் பதுமத்தின் 2,3 ஆம் இதழ்களில் வெளிவந்த அளவில் நிற்க, இந்நூலும் இடையே டையே முடிவு முடிவு பெறாது நிற்கலாயிற்று. அதுவரையில் வெளிவந்த இந் நூலின் பக்கங்கள் 216 ஆகும், இந் நூலுக்கு அப்போது இடப் பட்ட பெயரில் ‘வருஷம்' என்னும் வட சொற் கலந்திருக்கின்றது. இந்நூல் முதன் முதல் எழுதத் துவங்கிய ஞான்று, வடசொற் கலப்பால் தமிழ்மொழிக்கு நேரும் பொல்லாங்கினை யாம் உணராதிருந்தமையாற் சிறிதேறக் குறைய இந்நூலின் முதல் நூறு பக்கங்களிற் சிற்சில வடசொற்கள் இடையிடையே கலந்துவிடலாயின.

ஞானசாகரப் பத்தாம் பதுமத்து 3ஆம் இதழில் நின்றுபோய இந் நூற்பகுதி மீண்டும் ஞானசாகரம் பதினைந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/170&oldid=1590217" இலிருந்து மீள்விக்கப்பட்டது