உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 26

தாம் பதுமத்து 3 ஆம்இதழிலே துவக்கஞ் செய்யப்பட்டுச் சிறிதேறக்குறையத் தொடர்பாக அதன் கண்ணும். பதினாறாம் பதுமத்து முதல் நான்கிதழ்களிலும் வெளியாகி. இப்போது அப்பதுமத்தின் இவ் 5,6ஆம் இதழ்களில் முடிவு பெறலாயிற்று. இடையிலே மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் என்னும் பெரிய நூலை ஞானசாகரம் 10ஆம் பதுமத்தின் 10ஆம் இதழிலிருந்து துவங்கி ஏழாண்டுகள் பெரிதாராய்ந்தெழுதி, 14ஆம் பதுமத்தின் ஈற்றில் முடிக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தமையால், இந்நூல் சிறிதேறக் குறைய எட்டாண்டுகள் வரையில் இடையே எழுதப்படுதற்கு இடமில்லாமல் நின்று போயது. என்றாலும், எல்லாம் வல்ல இறைவன் திருவருளால் ப் பெருநூல் இருபத்து நான்கு ஆண்டுகட்குப் பின்னரேனும் ப் ப்போது இனிது முடிவுபெற லானமைக்கு எமது புல்லிய வணக்கம்எம் பெருமான் றிருவடிப்போதுகட்கு உரியதாகுக!

இந் நூலை முடித்தற்கு இத்தனை காலஞ் சென்ற தாயினும், இதிற் சொல்லப்பட்ட பொருள்களையும் முறை களையும் பற்றியாம் ஓவாது ஆராய்ந்தபடியாகவேயிருந் தேம். நோய் வரா வகைகளையும் வந்த நோய் நீக்குமுறை களையும் பற்றித்தமிழ் ஆங்கில வடமொழிகளிற் சான்றோர் எழுதிய உயர்ந்த நூல்கள் பற்பலவற்றை யாம் பயின்றறிந்த வளவில் நில்லாது, அவை தம்மை யெல்லாம் எம்மிடத்தே செய்து பார்த்தும். எம்மைச் சார்ந்தாரிடத்தே செய்து பார்த்தும். அவற்றுள் எவை மிகச் சிறந்தனவாய்ச் செலவில்லனவாய் எளிதிற் செய்து பயன்பெறத் தக்கனவாய்த் தெளியப்பட்டன வோ அவைகளை இந் நூலின்கண் வரைந் திருக்கின்றேம்.

இத்தகையதொரு பயன் சிறந்த உரைநூல் தமிழ் மொழிக்கண் இல்லாப் பெருங்குறையால், ஆண் பெண் பாலாரிற் பெரும்பகுதியினர் தமது வாழ்க்கையிற் பிழைமிக ஒழுகிப் பல்வகை நோய்களாலும் பொருட்செலவாலும் வறுமையாலும் பிடியுண்டு, தாம் ஆண்டு முதிரா முன்னரே இறந்தொழிவ தல்லாமலுந். தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும். அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் எல்லாம் எங்ஙனமே பெருந்துன்பங்களுக்கு வழிவழி ஆளாகி மடிந்து போகவுஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/171&oldid=1590218" இலிருந்து மீள்விக்கப்பட்டது