உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மறைமலையம் 26

மரணத்தின் பின் மனிதர் நிலை இரண்டாம் பதிப்பின் முகவுரை

இந்நூல் முதன்முதல் நமது ஞானசாகரம் (அறிவுக் கடல்) பத்திரிகையின் ஐந்தாம் பதுமத்து இரண்டாவது இதழில் சௌமிய ஆண்டு ஆவணித்திங்கள் துவக்கஞ் செய்யப்பட்டு, இடையிடையே பகுதிபதியாக வெளிவந்து, ஏழாம் பதுமத்து ஒன்பதாவது இதழின்கண் முடிவு பெறலாயிற்று. இதுவரையில் நமது செந்தமிழ் மொழியில் வெளிவராத உண்மைப் புதுப் பொருள் அடங்கிய இந்நூல் மக்கள் வாழ்க்கையின் இயல்பு களையும், அவர்கள் ஒவ்வோர் உலகங்களில் ஒவ்வொரு ரு வகையான உடம்புகளெடுத்து உலவுதலையும், அவர்கள் உலவும் உலகங்களின் தன்மைகளையும் நன்கு விளக்கி உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோற் காட்டுதல் கண்டு பலரும் தனை விரும்பிக் கற்பாராயினர். ஆயினும், ஞானசாகரம் (அறிவுக்கடல்) பத்திரிகை வாங்குவோரன்றிப் பிறர் இதனைக் கற்பதற்கு ஏற்ற வசதி இல்லாமை கண்டு இதனை இப்போது தனிப்புத்தகமாக வெளியிடலானேம்.

னி

.

இ னி மக்கள் என்று சொல்லப்படும் உயிர்கள் எண் ணிறந்த உயிர்ப்பாகுபாடுகளில் ஒன்றிற் சேர்ந்தனவேயாகும். ஆனால், மக்கள் என்னும் உயிர்கள் நல்லதிது தீயதிது என்று பகுத்துக் காணுஞ் சிறந்த மனனுணர்வும், தீயதை விலக்கி நல்லதைக் கைப்பற்றியொழுகுங் கடப்பாடும் உடையனவாய் இருத்தலால் இவை ஏனை ஐயறிவுயிர்கள் எல்லாவற்றையும் விடச் சிறந்தனவாகும். ஆகவே, இவை இறப்புப் பிறப்புக் களின் சிறுமையுணர்ந்து இறைவன் திருவடிப் பேரின்பத்தை அடைதற்கேற்ற பெருமை வாய்ந்தனவாகும். இத்துணைப் பெருமைவாய்ந்த இவ்வுயிர்கள் தம் பிறவிப் பெருமை அறியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/173&oldid=1590220" இலிருந்து மீள்விக்கப்பட்டது