உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

143

உணர்வர். இந்நூலில் எழுதப்பட்டிருக்கும் பொருள்கள், யாமறிந்தமட்டில், தமிழ்மொழியில் இதற்கு முன் இவ்வளவு அழகாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் எவராலும் திருத்தமாக எழுதப்படவில்லை. ஐரோப்பா அமெரிக்கா என்னும் புறநாடுகளிலுள்ள வெள்ளைக்கார நன் மக்களே இக்கல்வியின் மறைபொருள்களைச் செவ்வையாக ஆராய்ந்து நூல்கள் எழுதி உலக வாழ்க்கையிலும் பயன்படுத்தி வந்தவர்களாவர். நம் தமிழ்நாட்டிலுள்ள அருந்தவத்தோர் இக்கல்வியினையும் இதனைப் பயன்படுத்தும் முறைகளையும் நன்கு உணர்வராயினும், தகுதியுடைய மாணாக்கர் சிலர்க்கன்றி வேறெவர்க்கும் அவைகளைச் சிறிதுந் தெரிவியாமல் மறைவாகவே வைத்து வந்தனர். இனி, இங்குள்ள மந்திரகாரரிற் சிலர் இம்முறைகளைத் தெரிந்து பயன்படுத்தி வருவாராயினும், இவற்றின் உண்மை களைச் சிறிதாயினும் ஆராய்ந்துகண்டு, அவற்றை உயர்ந்த வழிகளிற் பயன்படுத்தத் தெரிந்தவர் அல்லர். மேலும், அவர் இவற்றைப் பொல்லாங்கான வழிகளிலும் பயன்படுத்தித் தமக்கும் பிறர்க்குங் கேடு விளைப்பவராகவுங் காணப்படுகின்றனர். அருந்தவத்தோரும், மந்திரகாரருங் கையாண்டுவரும் இவ் யோகநித்திரை என்னும் அறிதுயின் முறைகளின் உண்மையினையும் மெய்ப்பயனையும் அறிந்து கொள்ளமாட்டாத மக்கள், அவ்வறியாமையாற் பெரிதும் பிழைபட நடந்து, நிரம்பவுந் துன்புறுகின்றார்கள். இக்கலையின் உண்மையினையும் இதனைப் பயன்படுத்தும் வகையினையும் அறியாதிருக்கும்வரையில், பல்பிணிச் சிற்றறிவினராகிய மக்கட்கு ஐயோ! துன்பத்தினின்றும் மீட்சி இல்லை. அதுகண்டு உள்ளங் குழைந்தே, இந்நூலிற் சொல்லிய பொருள்களையும் பயன்படுத்தும் முறைகளையும் பல்காலும் பலபடியாலும் ஆராய்ந்து, நேரேயும் செய்து பார்த்து, இவற்றை எல்லாரும் அறிந்து பயன்பெறும் பொருட்டுத் திறந்தெழுதி ஒரு நூலாக வெளியிடலாயினேம். இவற்றின்கண் தெரிந்தெழுதப் பட்ட முறைகளெல்லாம் நேரே பலகாற் செய்துபார்த்துத் தீதில்லாப் பயன்றருதல் தெளியப் பட்டனவாகலின், இவற்றை ஊன்றிக் கற்றுப் பழகுவார் தாம் வேண்டிய நலங்களையும் பெறுவரென்பது திண்ணம்.

L

சில்வாழ்நாட்

எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/176&oldid=1590223" இலிருந்து மீள்விக்கப்பட்டது