உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

  • மறைமலையம் - 26

நிகழ்கின்றனவாயினும், அவை தம்மை நடுநின்று ஆராய்ந்து பல மெய்ச் சான்றுகளால் உறுதிப்படுத்துவாரும் உறுதிப்படுத்தி நூல் எழுதுவாரும், யாமறிந்தவரையில், எவருமில்லை. அதனால் இத்தமிழ்நாட்டில் நிகழுந் தொலைவிலுணர் நிகழ்ச்சிகளை குதியாய் எடுத்துக் காட்டுதுல் எம்மால் இயலாதாயிற்று. எந்நாட்டிலிருப்பினும், எம் மக்கள் குழுவைச் சேர்ந்த வராயிருப்பினும், உண்மைகாணும் வேட்கையும் முயற்சியும் ய சான்றோர் ஆராய்ந்து கண்ட மெய்ம்மைகளை எடுத்துக் ய காட்டுதலே மக்களுக்கு மெய்யறிவைத் தருமாகலின், யாம் எடுத்துக்காட்டிய மேனாட்டாசிரியர் தம் மெய்யுரைகள் நம்தமிழ் நாட்டவர்க்கு மெய்யறிவைப் பயந்து அவர்க்குப் பெருநலன்களை விளைக்கு மென்னும் நம்பிக்கை யுடையேம்.

உடை

இருபத்துநான்கு ஆண்டுகளுக்குமுன் யாம் இந்நூலை எழுதத்துவங்கிய காலத்தில், வடசொற் கலப்பால் நம் செந்தமிழ் மொழிக்குண்டாந் தீதினை உன்னியாதிருந்தேம். அதனால், இந்நூற்படிகள் சிலவற்றில் முதல் ஐம்பதுதொரு பக்கங்கள் வரையிற் சிற்சில வடசொற்கள் கலந்துவிட்டன. இந்நூலின் இரண்டாம் பதிப்பில் அவ்வடசொற்கள் களைந்தொழிக்கப் படும். இதுகாறும் எமது நூற்றொண்டுக்குத் துணைபுரிந்துவரும் இறைவன்றிருவருள் மேலும் அதற்குத் துணைபுரிவதாக!

பல்லாவரம்

பொதுநிலைக்கழக, நிலையம், திருவள்ளுவர் ஆண்டு,

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/181&oldid=1590228" இலிருந்து மீள்விக்கப்பட்டது