உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

மறைமலையடிகள்

155

தமிழ் முகவுரைகள் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை யடுத்துவந்த காலத்தும் அச் செய்யுட் சொற்கட்குப் பொருடெளிவது அச்செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாமாதலின், இங்ஙனஞ் சொற் பொரு டுணிவிக்கும் முறையைத் தமிழாராய் வோர் அனைவருங் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்கம் உடையதாகித் திகழும்.

இனி, இவ்வாராய்ச்சியுரையின்கண் மற்றொரு முதன்மை யான சீர்திருத்தமுஞ் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்புந், தனக்கெனப் பன்னூறாயிரஞ் சொற்களும் வாய்ந்து, இன்றுகாறும் வழக்கு வீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொரு வர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், உலக வழக்கிற்குச் சிறிதும் பயன்படாமல் இறந்துபட்ட மொழிகளையும் அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார்போற் றம்மை எண்ணிக்கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர, எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதுங் கைவிட்டிருத்தல் நிரம்பவும் இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவுங் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன்நடந்து காட்டும் பொருட்டு, இதற்குமுன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டுவரும் இப்போது முழுதுங் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற்றூய தமிழ்ச் சொற்களையே

இரங்கற்பாலதொன்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/188&oldid=1590235" இலிருந்து மீள்விக்கப்பட்டது