உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

  • மறைமலையம் - 26

நிரப்பி வருகின்றேம். இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையின் கண்ணும் முற்பதிப்புகளிலிருந்த அயன்மொழிச் சொற்களை நீக்கி அவற்றிற்கீடான செந்தமிழ்ச் சொற்களையே இப்பதிப்பின்கட் பெய்து வைத்திருக்கின்றேம்.என்றாலுங், காலநிலைக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் இசையச் சில அயன்மொழிச் சொற்களையுஞ் சில சொற்றொடர்களையுங் குறியீடுகளையும் ஒரோவிடங்களில் மிகச் சிறுக எடுத்தாளுதல் வழுவன் றென்பதூஉம் அறிஞர்க்கு உடன்பாடாமென்க. இத் தன்மையவான ஆராய்ச்சியுரைகள் எழுதுவதற்கு நல்வழி காட்டின ஆங்கிலமொழி நல்லிசைப் புலவர்க்கு யாம் எழுமையும் நன்றி பாராட்டுங் கடமை உடையேம்.

பல்லாவரம்

பொதுநிலைக் கழகம் சாலி, 1841 ஆவணி மீ

த்

இங்ஙனம்

மறைமலையடிகள்

நான்காம் பதிப்பின் முகவுரை

இற்றைக்கு இருபத்தெட்டாண்டுகளுக்கு முன் யாம் இம் முல்லைப்பாட்டாராய்ச்சி யுரையை எழுதிய காலத்துப் பழைய சங்கத் தமிழிலக்கியங்களாகிய அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை முதலாயின அச்சிட்டுவெளிப்படுத்தப்படவில்லை. அதனால் யாம் பயின்ற தொல்காப்பிய வுரையிலிருந்தே இவ்வாராய்ச்சியுரைக்கு வேண்டிய மேற்கோட் செய்யுட்களை எடுத்துக்காட்டலாயினேம். அப்போது அம் மேற்கோள் உள்ள நூல்களைக் குறிப்பிடுதல் இயலாதிருந்தது. மற்று, இந் நாளிலோ எட்டுத்தொகை நூல்கள் அவ்வளவும் வெளிவரும் பேறு கிடைத்திருத்தலின், யாம் இப்பதிப்பின்கண் ஒவ்வொரு மேற் கோளுக்கும் அவை வந்துள்ள நூல்களின் பெயர்களைக் குறித்திருக்கின்றேம்.

அதுவேயுமன்றி, முற்பதிப்புகளில் இல்லாத சில பகுதிகளும் விளக்கவுரைக் குறிப்புகளும் இப்பதிப்பின்கட் புதியவாய்ச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/189&oldid=1590236" இலிருந்து மீள்விக்கப்பட்டது