உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் - 26

வரைகுவனேயன்றி, அதனை யுள்ளவாறே வரைந்து நமது சுவையுணர்வினைக் கெடுப்பான் அல்லன்; எனவே, அவன் பலநாளும் பலமுறையும் ஆய்ந்தாய்ந்து பார்த்துத் தான் வரையும் பொருள் வடிவங்களை இயற்கையிற் காணும் அளவினும் அழகுசெய்து, பகலவனொளி படும் பகுதி ஒளிரவும் அது படாத பகுதி சிறிதே இருளவும் வண்ணங்களை ஆற்றித் தொட்ெ தாட் ழுதி, அங்ஙனம் எழுதிய ஓவியத்தைக் காண்ப தெல்லாம் “ஆ! இஃதியற்கையை எவ்வளவு ஒத்திருக் கின்றது! எனினும், ஈது இயற்கையழகினும் எவ்வளவு சிறந்து துலங்கு கின்றது!” என்று வியந்துகூறிப் பெரிதும் இன்புறச் செய்யுஞ் செயற்கருஞ் செய்கைத்திறனுடையனா மென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இங்ஙனம் இருவேறுவகையவாய், அமைக்கப்படும் படங்களுள் நிழலுருப்படத்தை யொப்பதே வரலாற்று நூலா மென்பதூஉங், கைவல் ஓவியன் வரைந்த அரிய ஓவியத்தை யொப்பனவே கதைகள் நாடகங்கள் காவியங்களாகு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். இயற்கையிற் காணப்படும் பல்வகைப் பொருள்களையும் அவற்றின் நிகழ்ச் சிகளையும் அவ்வியற்கையிலுள்ளவாறே வகுத்துரைக்கு மாற்றில் வரலாற்று நூல்கள் நிழலுருப்படங்களையே ஒப்பனவாகும். மற்று, இயற்கையி லுள்ளவற்றை அவ்வவ்வற்றின் இயல்புக்கு மாறாகாமலே, மேன் மேற் றூய்மைசெய்து மேன்மேல் அழகுசெய்து, தன் அறிவியல் நுட்பமுந் தன் அழகியலுணர்வும் அவற்றின் அமைப்பினூடு விரவி விளங்கச் சான்றோ னொருவனால் யாக்கப்படுமாற்றிற் கதை நூல் கதைநூல் முதலியன விழுமிய ஓவியங்களையே யொப்பனவாகும். இயற்கைக்கு முற்றும் மாறுபட்டுக் காணப்படும் ஓவியங்களை நோக்குவார். அவற்றைக்கண்டு மகிழாமல் “ஈதென்னை! உலகத்தில் எங்குங் காணப்படாத பொய்வடிவாய் இருக்கின்றதே!” என்று இகழ்ந்துபோதல் போல, உலகவியற்கை மக்கள் இயற்கைக்கு முழுமாறாய் ஆக்கப்பட்ட கதைகள் நாடகங்களைக் காணும் அறிஞர் அவற்றின் பொய்ம்மை கண்டு அவற்றைப் பாராட்டாது புறத்தொதுக்குவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/199&oldid=1590246" இலிருந்து மீள்விக்கப்பட்டது