உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

167

அற்றேல், இயற்கையோ டொத்தவற்றில் நமக்கு மகிழ்ச்சி மிகுதலும், ஒவ்வாதவற்றில் அருவருப்புண்டாதலும் என்னை யெனின்; மக்கள் மனநிலை உள்ளதை உள்ளவாறு அறிதலிலேயே வேட்கை மிகுந்து நிற்கின்றது; அதுதான் அங்ஙனம் நிற்கவேண்டுவ தென்னையெனின்; உண்மையுணரும் அறிவினாலேயே மக்க ளெல்லாரும் உயிர்பிழைத்து வாழ வேண்டியவர்களாய் இருக்கின்றார்கள். பசித்து உண்ண வேண்டி யிருப்பவனுக்குத் தனக்கேற்ற உணவையறிந்து உட்கொள்வதில் வேட்கையிருக்குமே யல்லாமல், உணவுப் பண்டங்களைப்போல் மெழுகாலும் நெட்டியாலுஞ் செய்யப் பட்டவைகளையெல்லாம் அறியாமல் உணவென நம்பி யுட்கொள்வதில் வேட்கை சல்லாது; நீர் வேட்கை மிகுந்தவனுக்கு நறுந் தீம்புனல் பருகுவதில் விழைவு மிகுமேயல்லாமல், தீம்புனல்போற் பொய்யாகச் செய்து வைக்கப்பட்ட நச்சுநீரைப் பருகுவதில் விழைவு செல்லாது, தமது பசிக்குந் தமது விடாய்க்கும் வேண்டுவன இவைதாம் என உண்மையாக அறிந்தாலன்றி, எவரும் எதனையும் வெறுந் தோற்றத்தளவில் மயங்கி உட்கொண்டு விடக் காண்கின்றோ க் மில்லையே. அல்லதெவரேனும் அறிவுமயங்கி நஞ்சை யுணவாகப் பொய்த்துணர்ந்து உட்கொள்வராயின், அவர் தமதுயிரிழத் தலுங் காண்டுமென்றே, ஆக, உயிர்வாழ்க்கை இனிது நடைபெறுதற்கே பொருள்களை உள்ளவா றுணர்தல் இன்றியமையாது வேண்டப் படுவதாயிருக்க, உயிர்வாழ்க்கை யோடு இன்ப அறிவு வாழ்க்கையும் நன்கு வாய்த்தற்கு உண்மையுணர்ச்சி இன்னும் எத்துணை இன்றியமையாததாய் வேண்டப்படும்! உண்மையுணர்ச்சி இத்துணைச் சிறந்ததாய் இருத்தலினாலேயே, நாம் பயிலுங் கதைகள் நாடகங்கள் காப்பியங்கள் முதலிய நூல்களிற் கூறப்படும் நிகழ்ச்சிகள், நம் பழக்க வழக்கங்களிற் காண்கின்ற படியே உண்மை வழாது நுவலப்பட்டிருத்தல் காணிற்பெரிது மகிழ்ந்து அவைதம்மை மிகப்புகழ்ந்து பேசுகின்றோம்.

மேலும், நம்மோடொத்த மக்கள் எவ்வெவ் வகையான இயற்கையுடையரா யிருக்கின்றனர்? அவர்கள் தத்தம் இயற்கையால் எவ்வெவ்வகையான செயல்களைச் செய்கின்றனர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/200&oldid=1590247" இலிருந்து மீள்விக்கப்பட்டது