உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

தூ

மறைமலையம் - 26

பொருள்களையும் தூயவாக்கி வகுத்தலே நூல்யாக்குமுறை யென்பதனைச் சிறிதும் ஆய்ந்துபாராத இஞ்ஞான்றைக் கதை நூற்காரர்கள், வடசொல்லும் ஆங்கிலச் சொல்லுங் கொச்சைத் தமிழ்ச்சொல்லும் விரவிய மிகச் சீர்கெட்ட நடையில் அவைதம்மை வரைந்து, நூன்மாட்சி யினைப் பாழ்படுத்து கின்றனர். நாளேற நாளேற அறிவுஞ் செயலுஞ் சீர்திருந்தி வளர்தற்கு ஏற்ற உயர்ந்த முறையில் எழுதப்படுங்கதை நூல்களையே பயிலல்வேண்டுமல்லால், இத்தகைய வழூஉக் கதைகளைப் பயிலல் நன்றாகாது.

இனிப், பார்ப்பனருள்ளுந் தமிழ் நன்குணர்ந்தாரது மனவியற்கை மென்பதப்பட்டு விரிந்தநோக்க முடைத்தாய்ப் பிறர் நலங்கருதும் விழுப்பம் வாய்ந்து திகழ்தலும், அஃதுணராத ஏனையோரது இயற்கை வன்பதப்பட்டுக் குறுகிய நோக்கம் உடைத்தாய்த் தன்நலங் கருதுஞ் சிறுமைவாய்ந்து நிற்றலும் இக்கதை நிகச்சியுள் வருவார்பாற் பிரிந்து தோன்றி உலக வழக்கில் உள்ள படியே அமைந்துகிடத்தல் காணலாம். இவ்விரு வேறு வகையினருள்ளும் ஒவ்வொருவர் இயற்கையுஞ் சிறிதும் பெரிதுமாய்த் தனித்தனி வேறுபட்டு, அவரவர்க்குரிய உண்மைத் தோற்றத்தை ஓர் உருப்படுத்தித் தனித்தனி விளங்கக் காட்டுதலுங் கண்டுகொள்க.

இனிச், சிறந்த ஒரு கதையின் அமைப்பும் உடம்பின் அமைப்புந் தம்முள் ஒப்புமை யுடையனவாகும். உடம்பின் உறுப்புகள் அத்துணையும் ஒன்றுக்கொன்றுதவியாய் அவ்வுடம் போ டொருங்குசேர்ந்து நின்று அதனை வளரச்செய்தல் போல, இக் கதைநூற் றலைவியின் வரலாறும், அவடன் பெற்றோர் வரலாறும், அவடன் பாட்டன் மாமன் வரலாறும் பிறவுமெல்லாம் ஒன்றோ டொன்று பிணைந்துநின்று இக்கதையினை நடாத்துதல் காண்க. ஓர் உடம்பிற்கு அதன் உயிர் இன்றியமையாததாய் நிற்றல் போல மக்கட்கூட்டுறவின் விழுப்பமுங் காதற்கற்பொழுக்க மாட்சியுந் தமிழ்மொழியின் ஏற்றமும் முழுமுதற்கடவுள் விளக்கமும் க்கதை நூலுக்கு உயிராய்நிற்றல் உணர்ந்துகொள்க.

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/205&oldid=1590252" இலிருந்து மீள்விக்கப்பட்டது