உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

179

திருவொற்றி முருகன் மும்மணிக்கோவை இரண்டாம் பதிப்பும் அதன் உரையும்

முகவுரை

ஆம்

ஆண்டாகிய

விளம்பி

சாலிவாகன, 1820 ஆனித்திங்கள், 15-ஆம் நாள் (1898, ஜூன், 27) எமக்குண்டான கொடிய நோய்தீர்த்த முருகப்பிரான் றிருவருளை வியந்து இயற்றிய எமது மும்மணிக்கோவை அவன் றிருவடிக்குச் சாத்தப்பட்ட வரலாறு, இந்நூலின் முதற் பதிப்பு முகவுரையில் வரையப்பட்டுளது.

மேற்சொன்ன நோயால் துன்புற்ற நாளில் எமக்கு ஆண்டு,

21, மிக இளைஞனாயிருந்த காலம்; அப்போதுதான் யாம் சென்னைக்கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராய் அமர்ந்து மாணாக்கர்க்குத் தமிழ் இலக்கண இலக்கியங்கற்பித்து வரலானதும். அந்நாளில் யாம் பழைய தமிழ் இலக்கண இலக்கிய நூற்பயிற்சியில் மட்டுப்படா விழைவு கொண்டு கருத்தூன்றி யிருந்தேம். எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப்பயிற்சியானது எமது இருபத் தோராம் ஆண்டிற் பெரும்பாலும் நிரம்பிய தென்னலாம், இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம். திருக்குறள், திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச்செய்து முடித்தேம்; கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடியார் முதலிய நூல்களிற் பெரும்பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டன; சிவஞான போதம், சிவஞானசித்தியார் என்னும் நூல்களிரண்டும் முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப் பட்டன; இவையேயன்றி, நன்னூல் விருத்தி, தொல்காப்பியச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/212&oldid=1590259" இலிருந்து மீள்விக்கப்பட்டது