உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

மறைமலையம் 26

சூத்திரவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை, இறையனாரகப் பொருளுரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும்

முன்னமே முழுமையும் நெட்டுருச்செய்து முடிக்கப்

பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் ம் சொற்சுவை பொருட்சுவைகளிற்

பெரிதுமூழ்கி யிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ்செய்த செய்யுட்கள் மிகுதியாயில்லை; என்றாலும், அவற்றின் சொற் பொருணயங்கள் எமதுளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக, விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டுநின்று பயின்ற பயிற்சியினாலேயே, செய்யுளும் உரையுந்

தனிச்செந்தமிழ் நடையில் எழுதுந் திறம் எமதிளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று; எழுதும் திறம் வாய்ப்பவே. அவைக்களங்களிற் பேசுந்திறமும் அதனையொட்டி வாய்ப்பதாயிற்று. பழந்தமிழ்ப் பயிற்சியால் எமக்குண்டான சொற்பொருணலங்கள் அத்தனையும் இம்மும்மணிக் கோவையின் கண் விளங்கிக்கிடத்தல் எளிதில் அறியப்படும். இஞ்ஞான்றைத் தமிழ்மாணவரும் பிறரும் இந்நூலைக் கருத்தூன்றிக் கற்பராயின், அவர் பழந்தமிழ்நூற் சொற்பொரு ணயங்களை எளிதில் உணர்ந் தின்புறுதற்கு இஃதொரு

வழிகாட்டியாமென்னும் நம்பிக்கையுடையேம்.

இனி, எமக்குவந்த கொடுநோய் தீர்த்த முருகப்பிரான் றிருவடிக்கு ஒரு பாமாலை தொடுக்க விழைந்த எமது கருத்து, அந்நோய் தீர்ந்த ஒன்றரையாண்டுகட்குப் பிறகுதான் நிறை வேறலாயிற்று. கல்லூரியில் உயர்வகுப்பு மாணவர்க்குத் தமிழ் நூல்கற்பிக்குந் தொடர்ந்த முயற்சிக்கிடையிடையே, அவைகளிற் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் முயற்சியும், எமதில்லத்தே போந்து தமிழ்கற்க விழைவு க விழைவு மீதூர்ந்த மாணவர்க்கு அது கற்பிக்கும் முயற்சியும், அஞ்ஞான்று நடைபெற்ற தமிழ்வெளியீடு ஆங்கில வெளியீடுகட்குத் தமிழ் ஆங்கிலக்கட்டுரைகள் எழுதிவிடுக்கும் முயற்சியும் பிறவும் நடைபெற்றுவந்தன. அவற்றிற் கிடையே எம் மனைவி இருமல் நோயால் துன்புற்றனர் யாம் அப்போ தீன்ற பெண்மகவுஞ் சிலந்திக்கட்டிகளால் நெடுநாள் துன்புற்றது; எமக்கப்பபோது கல்லூரியிற்கிடைத்த சம்பளமோ டத்த சம்பளமோ சிறிதாதலால் எமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/213&oldid=1590260" இலிருந்து மீள்விக்கப்பட்டது