உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இறைவனருளைத் தலைக்கூடும் வகைகளையும் மாணிக்க வாசகரைப் போல் அத்துணை உருக்கமாக எடுத்து விரித்துப் பாடுதற்கு அவர் இடம்பெற்றிலர் மற்று, மாணிக்கவாசகரோ அவரைப்போல் தமது குழவிப் பருவத்திலேயே இறைவனைக் கண்டு, சிறிதுகாலத்தில் அவனருளிற் கலந்தவரல்லர் ஏனை மக்களுட் சிறந்த குடிப்பிறந்த மகாரைப்போல், அஞ்ஞான் றுள்ள கலைகளையெல்லாம் பல்லாண்டுகள் முயன்று கற்று அறிவு நிரம்பித், தாய்தந்தையர் சுற்றத்தவரால் L மணஞ் செய்விக்கப்பெற்று, அவரிடையே செல்வவாழ்க்கையில் வாழ்ந்து, பின் பாண்டிய அரசற்கு அமைச்சராய் அமர்ந்து, உலகியலுள் விரசிக் காணப்படும் நலந் தீங்குகளையெல்லாம் மாறிமாறி நுகர்ந்து, பின்னர்ச் சடுதியிலே திருப்பெருந்துறையில் இறைவனைக் கண்ணாரக் காணப்பெற்று அவன் றிருவடிக்கு ஆளானவர்; வ்வாறவர் உலகவாழ்வி னூடுசென்று சிவபிரான்றிருவருளைப் பெற்ற குறிப்பு,

“மாடுஞ் சுற்றமும் மற்றுள போகமும்

மங்கையர் தம்மோடுங்

கூடி அங்குள குணங்களால் ஏறுண்டு குலாவியே திரிவேனை

வீடு தந்துஎன்றன் வெந்தொழில் வீட்டிட

மென்மலர்க் கழல் காட்டி,

ஆடுவித்துஎனது அகம்புகுந்து ஆண்டதோர் அற்புதம் அறியேனே”

ல்

என்று அவர் தாமே அருளிச்செய்த திருப்பாட்டால் நன்கு விளங்கா நிற்கின்றது. இத்தகையதொரு செய்யுளைத் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களிற் காண்ட அரிதினும் அரிது; மற்றுத், திருவாசகத்திலோ இன்னோ ரன்ன கருத்துக்கள் உள்ளடங்கிய செய்யுட்கள் பற்பல.

இங்ஙனம் மக்கள் வாழ்க்கையில் எங்குங் காணப் படுங் குற்றங் குறைகளை ஒருவர் நினைந்து, அத்துணைத் தீங்குகளையும் பொறுத்து எத்துணையுந் தூயனாகிய இறைவன் எத்துணையும் எளிய தம்மை ஒரு பொருட்டாக்கி ஆளும் அருட்டிறத்தையும் நினைந்து, அவை இரண்டனையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/225&oldid=1590272" இலிருந்து மீள்விக்கப்பட்டது